பயத்தை விட விசுவாசம்மாதிரி

எலிசபெத் பதிலளிக்கப்படாத ஜெபத்தின் வேதனையுடன் வாழ்ந்தார். அவர் மற்றும் அவருடைய கணவர் சகாரியா தினமும், வருடந்தோறும் தேவனுக்கு பணிசெய்த விசுவாசிகள்… ஆனால் குழந்தை பெறும் கனவு காலப்போக்கில் மங்கியது. பின்னர், எதிர்பாராத விதமாக, எல்லாம் மாறியது. ஒரு தூதன் அவர்கள் ஒரு மகனைப் பெறுவார்கள் என்று அறிவித்தான்; எலிசபெத் கருவுற்றார்.
எலிசபெத்தின் பயங்களை பற்றி அதிகம் கேட்கவில்லை, ஆனால் அவை இருந்திருக்கும். பல ஆண்டுகளாக காத்திருந்து, இப்போது உண்மையில் இது நடக்கிறதா என்று நம்ப முடியுமா? இருந்தாலும், அவர் நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தார். தேவன் புதியதாக ஏதோ செய்கிறார் என்பதையை அவர் உணர்ந்தார், அது முழுமையாகப் புரியாவிட்டாலும்.
பயம் அல்லது சந்தேகத்திற்கு அடிமையாகாமல், எலிசபெத் விசுவாசத்துடன் பதிலளித்தார். அவர் கருவுற்றபோது, “கர்த்தர் எனக்காக இதை செய்தார்” (லூக்கா 1:25) என்று கூறி, தனது மகிழ்ச்சிக்கு தேவனுக்கே மகிமை கொடுத்தார்.
பின்னர், மரியாள் அவரை சந்திக்க வந்தபோது, எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரம்பி, மரியாள் வாக்குக்கிணங்கிய மெசியாவை கருவில் கொண்டிருக்கிறாள் என்பதை உடனே அறிந்தார். அவர் மரியாளை “என் ஆண்டவரின் தாய்” (லூக்கா 1:43) என்று அழைத்தார். பிறர் கவனிக்காமல் விட்டதை அவர் பார்த்தார்; ஆசீர்வாதம் மற்றும் உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பேசினார்.
எலிசபெத்தின் கதை, விசுவாசம் என்றால் — எப்போதும் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதல்ல என்பதைக் காட்டுகிறது. சில சமயம் அது அமைதியாகப் பிடித்துக்கொண்டு, தேவனின் நேரத்தை நம்பி, அவர் செய்கிறதை உணர்வதையே குறிக்கிறது.
பயத்தை விட விசுவாசம் என்பது, பதில்கள் தாமதமாக இருந்தாலும் அல்லது பாதை தெளிவாக இல்லாவிட்டாலும், தேவன் இன்னும் செய்கிறார் என்று நம்புவதை குறிக்கிறது. எலிசபெத் நமக்குச் நினைவூட்டுவது — தேவனின் நேரம் நம்முடைய நேரத்திலிருந்து மாறுபடும்; ஆனால் நம்பிக்கைக்கு எப்போதும் தாமதமில்லை.
தியானம்: நீங்கள்தற்போதுதேவனைஎங்குகாத்திருக்கிறீர்கள்? எல்லாபதில்களும்இல்லாமல்விசுவாசத்தில்நடப்பதுஉங்களுக்குஎன்னஅர்த்தம்?
ஜெபம்: ஆண்டவரே, என்நேரப்படிநிகழாதபோதுஉம்மைநம்பச்செய்யும்கிருபையைத்தாரும். பயமோ, உறுதியாகஇல்லாதநிலமோஇருந்தாலும், நீu;இன்னும்செய்கிறாய்என்பதைநம்பும்விசுவாசத்தைத்தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

சத்தியம் மறுரூபப்படுத்தும்

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
