பயத்தை விட விசுவாசம்மாதிரி

கிறிஸ்துமஸ் நாளில், நாம் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறோம் – ஒரு தொட்டிலில் குழந்தையாக மட்டுமல்ல, பயத்தால் நிரம்பிய உலகுக்கு சமாதானத்தைத் தரும் இரட்சகராகவும். சமாதானம் ஒரு சாமான்யமான இடத்தில், துணிகளால் போர்த்தப்பட்டு வந்தது. சமாதானத்தின் அரசன் ஆன இயேசு நமக்குச் சமீபமானார்.
ஆண்டுகள் கழித்து, அவர் தனது சீஷர்களிடம்,
“சமாதானத்தை உங்களுக்குக் கொடுத்து செல்கிறேன்; என் சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல் நான் கொடுப்பதில்லை. உங்கள் இருதயங்கள் கலங்காதபடியும் பயப்படாதபடியும் இருங்கள்” (யோவான் 14:27) என்றார்.
இயேசு தரும் சமாதானம், உலகம் தரும் எந்தப் பொருளையும் ஒப்பிட முடியாதது. அது அமைதியான சூழ்நிலைகளிலும், தெளிவான பதில்களிலும் மட்டும் சார்ந்ததல்ல. அது – தேவன் இங்கே, இப்போதே, நம்மோடு இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் வேரூன்றியது.
கிறிஸ்துமஸ் அனைத்து பயத்தையும் நீக்குவதில்லை, ஆனால் நம்பிக்கையை எங்கு வைக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. “பயப்படாதீர்” என்று தொடங்கிய செய்தி, இன்று தேவன் எனக்கு தரும் செய்தியாகவே தொடர்கிறது. நான் தனியாக நடக்கவில்லை. தேவன் அருகில் வந்துவிட்டார். எம்மானுவேல் – எம்மோடு இருக்கும் தேவன் – இன்னும் உண்மையாக இருக்கிறார்.
பயத்திற்கு மாறாக விசுவாசத்தைத் தேர்வு செய்வது, அந்த சமாதானத்தை நம் இருதயத்தில் வரவேற்பதைக் குறிக்கிறது. அது இயேசு மகிழ்ச்சியிலும் சிரமத்திலும் நம்மோடு இருக்கிறார் என்பதை நம்புவதாகும். அவர் தரும் சமாதானம், நாம் வாழும் விதத்தையும், நம்பும் விதத்தையும், உலகிற்கு பதிலளிக்கும் விதத்தையும் வடிவமைக்கட்டும்.
சிந்தனை: இன்று, எந்தப் பயங்களை நீங்கள் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள்? வருங்கால நாட்களில் அவருடைய சமாதானம் உங்களுக்கு விசுவாசத்தோடு வாழ உதவுவது எப்படி?
ஜெபம்:
யேசுவே, எங்கள் உலகிலும் என் வாழ்க்கையிலும் வந்ததற்கு நன்றி.
இன்று உமது சமாதானத்தால் என்னை நிரப்பி, ஒவ்வொரு நாளும் பயத்திற்கு பதிலாக விசுவாசத்தைத் தேர்வு செய்யச் செய்.
ஆமேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

சத்தியம் மறுரூபப்படுத்தும்

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
