கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் பலன்
இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவர் செய்த அனைத்தையும் மிக அருகில் இருந்து பார்த்தார்கள். அற்புதங்களையும்,மீட்பையும்,மரித்தோர் உயிருடன் எழுப்பப்படுவதையும்,தள்ளுண்டவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பார்த்தார்கள். பெருகிய அப்பத்திலிருந்து திருப்தியாகச் சாப்பிட்டார்கள்,புயல் வீசும் கடலை அமர்த்தியதைப் பார்த்தார்கள் மற்றும் தாங்கள் சேர்ந்து சாப்பிட்டிருக்கவே கூடாதவர்களுடைய வீடுகளுக்குச் சென்றார்கள்!
நீங்களும் நானும் உண்மையாக இயேசுவைப் பின்பற்றும்போது,நமக்கும் இந்த அனுபவங்கள் கிடைக்கின்றன. தம்மை விசுவாசிக்கிறவன் தாம் செய்த கிரியைகளிலும் மேலான கிரியைகளைச் செய்வான் என்று இயேசுவே சொல்லியிருக்கிறாரே.
அது ஆச்சரியமானதல்லவா?
ஆனால்,நாம் இயேசுவை அந்த அளவுக்கு நெருக்கமாகப் பின்பற்றத் தீர்மானிப்போமா? என்பதுதான் இங்கு கேள்வி.
நான் அனுதினமும் என் சிலுவையை எடுத்துக்கொண்டு,என்னையே வெறுத்து,என் முழு இருதயத்தோடும்,முழு ஆத்துமாவோடும்,முழு மனதோடும்,முழு பலத்தோடும் அவரைப் பின்பற்ற விரும்புவேனா?
இந்தக் கேள்வியை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதற்காக நீங்கள் செலுத்த வேண்டிய விலைக்கிரயத்தை மனதில் கொள்ள வேண்டும் என்றாலும்,அத்தகைய அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைக்குக் காத்திருக்கும் எண்ணற்ற பலன்களையும் மனதில் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் இயேசுவோடு நெருங்கி நடக்கத் தீர்மானிக்கும்போது,சீஷர்கள் இந்த உலகத்தில் இயேசுவைப் பின்பற்றும்போது அனுபவித்து மகிழ்ந்த அதே காரியங்களை நீங்களும் அனுபவித்து மகிழ்வீர்கள். அது மட்டுமல்ல,அவரைக் காணாமலே நீங்கள் அவரை விசுவாசிப்பதால்,உங்களுக்குக் கிடைக்கும் பலன் அதைவிட மேலானதாக இருக்கும். அதோடு,நாம் மட்டுமல்ல,நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்திற்கும் மறுரூபத்தைக் கொண்டு வரும் உள்ளுணர்வுடனும்,வல்லமையுடனும் வாழ நமக்கு உதவிச் செய்யும் பரிசுத்த ஆவியானவர் என்னும் நம்பமுடியாத ஈவையும் பெற்றுக்கொள்வீர்கள்!
எங்களுடன் சேர்ந்து இயேசுவைப் பின்பற்றும் பரவசமான பயணத்திற்கு நீங்களும் ஆயத்தமா?
அறிக்கை: இந்த உலகத்திலேயே நான் தேவராஜ்யத்தைக் காண்பேன்,எனக்குள் இருக்கும் கிறிஸ்துவுக்கு நன்றி.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
