கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை நாம் பின்பற்றுகிறவரே நிர்ணயிக்கிறார்
பின்பற்றுவதில் மிக முக்கியமானது,நாம்யாரைப்பின்பற்றுகிறோம் என்பதே. நாம் அவரைப் பின்பற்றுவது அல்ல,மாறாக அவர் யாராக இருக்கிறார் என்பதே அற்புதம். மாம்சத்தில் வந்த தேவனும்,தேவகுமாரனுமாகிய இயேசுவை நாம் பின்பற்றுகிறோம். அவர் தம் முதலாம் சீஷர்களைத் தேர்ந்தெடுத்தபோது,அவர்களுக்கு அப்பத்தைப் பெருகச் செய்பவராகவும்,புயல்காற்றை அமைதிப்படுத்துகிறவராகவும்,கடல் மேல் நடப்பவராகவும்,விடுதலையாக்குபவராகவும்,சுகமாக்குபவராகவும்,போதகராகவும், இன்னும் பலவிதங்களிலும் தம்மை வெளிப்படுத்தினார். மனிதர்கள் அறியாவிட்டாலும்,அவர்களுக்குத் தாம் ஏன் அதிகமாகத் தேவைப்படுகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள, இயேசு தம்மைப் பல பெயர்களால் அழைத்துக் கொண்டார். நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியவர்,பரலோக அப்பம்,ஜீவத் தண்ணீர்,வாசல்,நல்ல மேய்ப்பர்,உலகத்தின் வெளிச்சம்,வழி,சத்தியம் மற்றும் ஜீவன் என்று தம்மை வெளிப்படுத்தினார்.
இன்று,நாமும் அதே தேவனைப் பின்பற்றுகிறோம். சீஷர்கள் அவரை அறிந்திருந்ததை விட மிக அதிகமாக நாம் அவரை அறிந்திருக்கிறோம். அவரே வரப்போகிற ராஜாவும்,சர்வபூமியின் நியாயாதிபதியுமாக இருக்கிறார். அவரே சிங்கமாகவும்,ஆட்டுக்குட்டியாகவும் இருப்பவர்.
அவரே முழு உலகத்தின் இரட்சகரும்,மீட்பருமானவர். மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்,பாவத்தையும் மரணத்தையும் வென்றவரும் அவரே. நித்திய பிதாவும்,சத்திய ஆவியும் அவரே. நமக்குள் வாசம் பண்ணி,நம்முடைய மாறாத துணையாளராக இருந்து,நமக்கு உணர்த்துதலும்,ஆலோசனையும்,ஆறுதலும் கொடுப்பவர் அவரே.
நாம் ஒவ்வொருவரும் நமக்கு மிகவும் தொடர்புடைய மற்றும் நமக்கு சவுகரியமாக இருக்கிற தேவனுடைய குணாதிசயத்தைச் சார்ந்துகொள்கிறோம். ஆனால்,கிறிஸ்துவைப் பின்பற்றும் இந்தப் பயணம் பரவசமானது,ஏனென்றால் நாம் தேவனை அவருடைய சகல வியத்தகு மகத்துவத்துடனும் அனுபவித்து மகிழ்கிறோம்!
அவர் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர்.
அவர் மகிழ்ச்சியூட்டும் விதத்தில் ஆச்சர்யமானவர்.
அவர் மகத்தான வல்லமையுள்ளவர்.
அவர் எல்லையற்ற படைப்பாற்றல் கொண்டவர்.
அவர் தம் இரட்சிப்பின் யுக்திகளிலும்,மீட்பின் அளவீடுகளிலும் மிகுந்த படைப்பாற்றல் உள்ளவர்.
நம்முடைய சிறு மூளையினாலும்,வரம்புக்கு உட்பட்ட நினைவுகளாலும் அவரைத் தடுக்கவோ,கட்டுப்படுத்தவோ அல்லது அடக்கி வைக்கவோ முடியாது.
தாம் சிருஷ்டித்த உலகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பு முடிவற்றது.
தம்மை விட்டு விலகிச் சென்றவர்களைத் தேடிச் செல்வதில் அவர் தளர்வடைவதே இல்லை.
இயேசு நமக்குக் கொடுத்த பிரதான கற்பனை உண்மையில், “இஸ்ரவேலே கேள்,நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” என்னும் உபாகம வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது. தேவனைப் பற்றிய நம் குறைவான அனுபவத்தின் அடிப்படையில் அவரை குணமாக்குபவர் அல்லது போஷிப்பவர் என்று ஒவ்வொரு விதமாகக் கூறுவது எளிது. ஆனால் அவர் நம் மனம் கிரகிக்க முடிந்ததை விட மிக மிக மேலானவர். இந்த மகத்தானவரும்,பன்முகத்தன்மையுள்ளவரும்,நம்பமுடியாத அளவிற்கு பயங்கரமானவருமான தேவன்ஒருவரே. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் அவரை முழுமையாக அனுபவித்து அறிவீர்கள். ஒரு பருவத்தில்,அவர் குணமாக்குபவராகத் தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாம்,ஆனால் அவர் தம்மை மீட்பராக வெளிப்படுத்துவார். உங்களுக்கு அவர் போஷிப்பவராக தேவைப்படலாம்,ஆனால் அவரோ எல்லாச் சூழ்நிலையிலும் உங்களை மீட்டெடுக்கும் ஆற்றல் உள்ளவராகத் தம்மை வெளிப்படுத்துவார். சிலசமயங்களில் நம்முடைய பயணத்தில் நாம் எதிர்பார்த்த விதத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்தாமல் இருப்பதால்,நமக்கு ஏமாற்றம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையில் தற்போது அவர் எப்படி கிரியைச் செய்கிறார் என்பதைக் காண உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறக்கும்படி தேவனிடம் கேளுங்கள்,ஒருவேளை அதற்கான நேரம் இதுவாக இருக்கலாம். எப்படியும் அவர்,நான் உன்னை விட்டு விலகுவதில்லை,உன்னைக் கைவிடுவதுமில்லை என்னும் தம் வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்கிறார்.
அறிக்கை: தேவன் என் வாழ்க்கையில் கிரியை செய்கிறார் என்று அறிந்திருக்கிறேன்.
இந்த திட்டத்தைப் பற்றி

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
