கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

வழியாக இருப்பவரைப் பின்பற்றுதல் என்பதற்கு அவர் எல்லா வழிகளிலும் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்
இயேசுவைப் பின்பற்றுவதற்கு நாம் விரிவான வாசல் வழியாக அல்ல,இடுக்கமான வாசல் வழியாகச் செல்கிறோம். இடுக்கமான வாசல் என்பது தேவனுக்குப் பிரியமானதைச் செய்யவும், அவரைக் கனம் பண்ணும் விதத்தில் வாழவும் தீர்மானிப்பதாக இருப்பதால்,அது இடுக்கமான வழியாக இருக்கிறது. இந்த வழியில் செல்லும்போது,அவ்வப்போது உங்கள் சுயத்தையும்,குறிக்கோள்களையும் சாகக் கொடுத்து,தேவன் நடத்தும் இடத்திற்கு அவரைப் பின்பற்றிச் செல்ல வேண்டியதாக இருக்கும். விரிவான பாதை எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்னும் தெரிவைக் கொடுக்கும். அதில்,நீங்கள் நினைத்தபடி வாழலாம்,உங்கள் சொந்த பலன்களுக்காகத் தீர்மானங்களை எடுக்கலாம்,மற்றும் உங்களுக்கு இன்பமான காரியங்களைச் செய்யலாம். இடுக்கமான வாசல் நித்திய வாழ்விற்கு வழிநடத்துகிறது என்றும்,விரிவான வாசல் கேட்டுக்கு வழிநடத்துகிறது என்றும் இயேசு மிகத் தெளிவாகத் தம் சீஷர்களுக்குக் கற்பித்தார்.
ஆனால்,இயேசு நம்மை அழைத்துச் செல்லும் இடுக்கமான பாதை ஒரு பெரும்பாதையாக இருக்கும். அதில் ஆச்சர்யமான திருப்பங்களும்,எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகளும்,வழக்கத்திற்கு மாறான வறட்சியும் அதைத் தொடர்ந்து செழிப்பான விரிவாக்கமும் இருக்கும். நாம் வாழ்க்கையின் விளிம்பிலோ,வனாந்தரமான பாதையிலோ,கல்லறை அல்லது மலையுச்சி போன்ற சூழல்களிலோ நின்றாலும்,தேவன் நம்மோடு இருக்கிறார். நம் வாழ்க்கையின் எந்தப் பருவத்திலும் அவர் நம்மை விட்டு விலகி,நாமாகவே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்படி விடமாட்டார். நாமாக அவரை விட்டு விலகிச் சென்றால் ஒழிய அவர் நம்மை அலைந்து திரிய விடமாட்டார். அப்போதும் கூட அவர் கூப்பிடு தூரத்தில்தான் இருப்பார்,நாம் அவரைக் கூப்பிட்டால் போதும்!
யோபு புத்தகத்தின் முப்பத்தொன்றாம் அதிகாரத்தில்,யோபு தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்பதைப் பற்றி எடுத்திருந்த ஏராளமான தீர்மானங்களைக் காணலாம். அந்த அதிகாரத்தை வாசித்து,நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து,அதில் தேவனுக்குப் பிரியமில்லாதது ஏதேனும் உண்டா என்று பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். அப்படி ஏதாவது இருக்குமென்றால் நாம் செய்ய வேண்டியதெல்லாம்,அவற்றை அறிக்கையிட்டு ஜெபித்து,நம்முடைய குறைகளிலிருந்து தேவனிடம் மனந்திரும்பி,அவர் இலவசமாகக் கொடுக்கும் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதுதான்!
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாக இருந்தால்,அவனுடைய சத்துருக்களும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார் என்று நீதிமொழிகளை எழுதியவர் கூறுகிறார். என்னவொரு அருமையான வாக்குத்தத்தம்!
அறிக்கை: இன்றும்,என்றும் நான் இடுக்கமான வாசல் வழியாகச் செல்லவே தீர்மானிக்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
