கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

பின்பற்றும்போது,சுகமடைதலும் தொடர்ந்து வரும்
இயேசுவின் இவ்வுலக ஊழியத்தில் வியாதிப்பட்டவர்கள் மற்றும் சிறுமைப்பட்டவர்களைக் குணமாக்குதல் பெருமளவில் இடம்பெற்றிருந்தது. இயேசு தம்மிடம் வந்த எல்லோரையும் எப்படிச் சுகமாக்கினார் என்று சுவிசேஷப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன. அவரைச் சந்தித்த ஒருவர்கூட வந்த வண்ணமாகத் திரும்பிச் செல்லவில்லை. அவர் சகலவிதமான நோய்களையும் சுகமாக்கினார் என்றும் வேதம் கூறுகிறது. அவர் அத்துடனும் நிறுத்தவில்லை,பிசாசினால் ஒடுக்கப்பட்டு,உணர்வுபூர்வமாகவும்,மனரீதியாகவும் கட்டப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். இன்றும் அப்படித்தான்! இயேசு தம்மைப் பின்பற்றும் நம் அனைவரையும் சுகமாக்குகிறார். உடனடியாக நமக்குச் சுகம் கிடைக்காமல் போகலாம்,நாம் எதிர்பார்க்கும் விதத்திலும் கிடைக்காமல் போகலாம்,ஆனால் தம்மை நேசித்துப் பின்பற்றுகிறவர்களுக்காக எப்போதுமே அவர் வருகிறார்.
இந்த தேவனை நாம் பின்பற்றும்போது,நம்முடைய வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறிவிடுகிறது! நாம் நினைத்தே பார்க்காத மோசமான மற்றும் தாழ்வான பாதைகளில் அவர் நம்மை நடத்திச் செல்கிறார். வாழ்க்கைப் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும்போது,சரீர சுகம் என்பது சரீர அளவில் மட்டுமல்ல,முழுமையான அளவில் நடைபெறுகிறது. மனிதர்களாகிய நமக்கு அதிசயமான ஆனால் சற்றுச் சிக்கலான அமைப்பு உண்டு. அந்த அமைப்பில் காணக்கூடிய சரீரம் மட்டுமல்ல,ஒன்றுடன் ஒன்று நுணுக்கமாகப் பின்னிப் பிணைந்த ஆவியும்,ஆத்துமாவும் உண்டு. நமக்குள் வாசம் பண்ணி,அசைவாடும் பரிசுத்த ஆவியானவர் உறவுரீதியாகவும்,உணர்வுபூர்வமாகவும்,சரீரத்திலும்,ஆக்கத்திறனிலும்,மனரீதியாகவும்,ஆவிக்குரிய விதத்திலும் சுகம் கொடுக்கிறார். இந்த சுகத்தைப் பெரும்பாலும் கண்களால் காண முடியாது என்றாலும் இது படிப்படியாக நாம் மட்டும் அல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களும் காணக்கூடிய விதத்தில் உணரப்படும்! இன்று,இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இல்லாத ஒரு மேன்மை நமக்கு உண்டு. அது,இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளக் கூடிய கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை ஆகும். இந்த வல்லமை நம் சரீரம்,ஆவி மற்றும் ஆத்துமாவின் வழியாகக் கடந்து செல்லும்போது,அவற்றில் மரித்த நிலையில் இருக்கும் அனைத்தையும் உயிர்ப்பித்து,நம்மையும் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மறுரூபமாக்கத் தொடங்குகிறது. நாம் நாளுக்கு நாள்,படிப்படியாக, சூழ்நிலைக்குச் சூழ்நிலை உள்ளும் புறமும் மாற்றமடைவதால்,முன்பு இருந்தது போல இருப்பதில்லை.
அறிக்கை: இயேசுவின் தழும்புகளால் நான் குணமானேன்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
