கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

12 ல் 4 நாள்

பின்பற்றுதல் என்பது புயல்காற்றைச் சந்திப்பது போன்றது

வாழ்க்கையில் புயல்காற்று வீசுவது மிகவும் எதார்த்தமானது,அது சிலநேரங்களில் சற்றும் எதிர்பாராமல் இருக்கும்போதும் வீசும்! சுகவீனம்,உறவு முறிவு,பொருளாதாரக் குறைபாடு,அல்லது வேலையிழப்பு போன்றவை திடீரெனத் தாக்கி,உங்களை முற்றிலும் அதிர்ந்து போகச் செய்யலாம். இயேசுவைப் பின்பற்றுவதால்,வாழ்க்கையின் போராட்டங்களும்,பின்னடைவுகளும் உங்களுக்கு வராது என்று சொல்ல முடியாது. ஆனால்,அப்படிப்பட்ட புயலின் மத்தியிலும் அவருடைய பிரசன்னம் உங்களை விட்டு ஒருநொடிப் பொழுதும் விலகாது என்ற நூறு சதவிகித உத்தரவாதம் உங்களுக்கு உண்டு.

பல நேரங்களில்,தேவன் உங்களைச் சுற்றி வீசும் புயலை அமைதிப்படுத்தும் முன்னர்,உங்களுக்குள்ளாக வீசும் புயலை அமைதிப்படுத்துவார். நம் இருதயம் கவலையோடு அல்லது பாரத்தோடு இருக்கும்போது,உள்ளாக வீசும் அந்தப் புயல் அதிவேகமாக இருக்கும். நம்முடைய எண்ணங்கள் வேகமாக ஓடும்போதும்,நம் மனம் குழம்பி தெளிவற்று இருக்கும்போதும் புயல்கள் வீசுகின்றன. இயேசுவுக்கு முற்றிலுமாக நம்மை அர்ப்பணித்து,அவரோடு கூட நடக்கும்போது,நம்முடைய இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ள அவருடைய சமாதானம் நம்மோடு இருக்கும் என்று அவர் வாக்குப்பண்ணுகிறார். அதுமட்டுமல்ல,அவருடைய சந்தோஷமும் நமக்குள் இருக்கும்,அந்த சந்தோஷம் நிறைவாக இருக்கும் என்றும் அவர் வாக்குப்பண்ணுகிறார். என்னவொரு அருமையான உறுதிப்பாடு! யாராவது புயலின் மத்தியில் அமைதியையும்,சந்தோஷத்தையும் காண முடியுமா?அது கஷ்டம் என்றாலும்,தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கோ அது சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

உங்களைச் சுற்றி வீசும் புயல்கள் மெய்யாக இருப்பது போல, நீங்கள் அவரை மெய்யாகப் பின்பற்றுவீர்கள் என்றால்,ஒரே வார்த்தையால் அந்தப் புயல்களை அமைதிப்படுத்தக் கூடிய சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னம் இன்னும் அதிக மெய்யானதாக இருக்கும். இயற்கை மற்றும் ஆவிக்குரிய உலகத்தில் காற்றும் கடலும் அவருக்குக் கீழ்ப்படிவதை அறிவதே நமக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுக்க வேண்டும். புயல்கள் இனி உங்களை பயமுறுத்த வேண்டியதில்லை,ஏனென்றால் அவற்றை அமைதிப்படுத்துகிறவர் உங்களோடு இருக்கிறார்!

அறிக்கை: கிறிஸ்து உலகத்தை ஜெயித்திருக்கிறார் என்பதால் நான் திடன் கொண்டிருக்க முடியும்!

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in