கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

12 ல் 11 நாள்

முழுச் சரீரத்தோடும் அவரைப் பின்பற்றுங்கள்

இயேசுவைப் பின்பற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்து அவருக்குக் கீழ்ப்படிய முன்வர வேண்டும். அவருடைய வார்த்தையை வாசித்து,அவர் நம் இருதயத்தையும் மனதையும் உருவாக்க இடமளிக்கும் அதே அளவு, அவர் நம்மிடம் கேட்பதைச் செய்வதும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அவர் நடத்திச் செல்லும் இடங்களுக்குச் செல்வீர்களா,அவர் உங்களைப் பேசச் சொல்வதைப் பேசுவீர்களா,அவர் செய்யச் சொல்வதைச் செய்வீர்களா?

அது மிகப்பெரிய கேள்வி.

நாம் தேவனுக்குக் கீழ்ப்படியும் விதம் நம்முடைய சீஷத்துவத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. சீஷன் என்பவன் என்ன நேர்ந்தாலும் தேவனுக்குக் கீழ்ப்படிபவனாக இருக்கிறான். ஆனால் சிலவற்றில் மட்டும் தேவனுக்குக் கீழ்ப்படியத் தீர்மானிக்கிறோம் என்பதுதான் பெரும்பாலும் நம்மிடம் இருக்கும் பிரச்சனை. நமக்கு சில காரியங்கள் செய்வதற்கு எளிதாக இருக்கும்,மற்றும் சில கடினமாகவோ அல்லது பார்ப்பதற்கு சாத்தியமற்றதாகவோ இருக்கும். இத்தகைய முழுமையற்ற கீழ்ப்படிதல் தேவனுடைய பார்வையில் கீழ்ப்படியாமை ஆகிறது.

நீங்கள் செய்யும்படி தேவன் உங்களுக்கு உணர்த்திக் கொண்டிருப்பது என்ன?

யாரோ ஒருவருடன் ஒப்புரவாகும்படி உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறாரா?

தீய உறவு ஒன்றை முறித்துக்கொள்ளும்படி அவர் உங்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறாரா?

உங்களுடைய இரட்சிப்பின் சாட்சியை உங்களோடு வேலை செய்பவருடன் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாரா?

உங்கள் கல்லூரி நண்பனுக்காக ஜெபிக்கும்படி உணர்த்தப்படுகிறீர்களா?

உங்களை அழைத்தவர் உங்களோடு இருந்து தம்முடைய கிரியையை உங்களில் முழுமையாக்குகிறார் என்பதை முற்றிலும் நம்பி தேவன் உங்களைச் செய்யும்படிச் சொல்வதைச் செய்யுங்கள்.

தேவ ஆவியானவர் இருதயங்களையும்,மனங்களையும் தொடும்போது,அவர் நம்மை மறுரூபமாக்கி, தேவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட ஆயத்தமாக்குகிறார். கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது. தம்மைப் பின்பற்றும்படி அடுத்த அடியை எடுத்து வைக்க தேவன் உங்களை அழைப்பதை நீங்கள் அறியும்போது,அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள். அவருடைய கிருபை உங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத மற்றும் அவருடைய பிரசன்னம் உங்களை நிழலிடாத இடத்திற்கு அவர் உங்களை நடத்திச் செல்லமாட்டார்.

நாம்யாரைப்பின்பற்றுகிறோம் என்பது மிக முக்கியம். நாம்ஒன்றான மெய்தேவனைபின்பற்றுகிறோம். ஆகவே,போதகர்கள்,தலைவர்கள்,ஆராதனைத் தலைவர்கள்,பிரபலமானவர்கள் அல்லது ஆளுமை கொண்டவர்களைப் பின்பற்றிப் போய்விடாதிருங்கள். மாறாக,கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!

அறிக்கை: என் முழு இருதயத்தோடும்,முழு மனதோடும்,முழு பலத்தோடும் நான் இயேசுவைப் பின்பற்றுவேன்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in