கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

12 ல் 9 நாள்

உங்கள் முழு இருதயத்தோடும் அவரைப் பின்பற்றுங்கள்

நம்முடைய இருதயம் அதிகமாகப் பகுக்கப்படுகிறது. இயல்பாகவே நம் அன்பும் பற்றும் குடும்பத்திற்கும்,வேலைக்கும்,நண்பர்களுக்கும்,பொழுதுபோக்கிற்கும்,சில சமயங்களில் சாப்பாட்டிற்கும் கூட பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் எதுவும் தவறல்ல என்றாலும்,சில நேரங்களில் நமக்கு அவற்றை அருளிச் செய்தவரிடம் காண்பிக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் அவை திருடிவிடுகின்றன. நாம் இயேசுவைப் பின்பற்றும்போது,நம்முடைய இருதயம் இவை அனைத்திலுமிருந்து முற்றிலுமாக மீட்கப்பட்டு,முதலாவது அவருக்கு இடமளிக்க வேண்டும். இருதயமே எல்லாவற்றிலும் கேடுள்ளது என்று எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறார். ஆகவே,நாம் அதைக் காத்துக்கொள்வதோடு,நன்றாகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு விருப்பமும்,குறிக்கோளும் அடிப்படையில் தேவனுக்குப் பிரியமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமாக மாற வேண்டும். விருப்பங்களும்,குறிக்கோள்களும் கொண்டிருப்பது தவறல்ல,ஆனால் அவை கிறிஸ்துவுக்கு முற்றிலும் அர்ப்பணித்த ஒரு இருதயத்தில் இருப்பது அவசியம். மற்ற பத்து இஸ்ரவேலரை விட காலேபும் யோசுவாவும் தேவனுக்கு முன்பாகத் தனித்துவமாக நின்றார்கள். அதற்குக் காரணம்,அவர்கள் தேவனுக்குத் தங்களை முழு இருதயத்தோடு,முடிவற்ற விதத்தில் அர்ப்பணித்திருந்ததே ஆகும். அவர்களுடைய இருதயம் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் நோக்கமாக இருந்ததால்,அவர் எங்கு நடத்திச் சென்றாலும், வழியில் சில இராட்சதர்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தாலும்,அவரைப் பயமில்லாமல் பின்பற்றினார்கள்.

நம்முடைய இருதயம் இயேசுவைப் பின்பற்ற முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் என்றால்,தேவன் மீதும்,அவருடைய ராஜ்யத்தின் வேலையின் மீதும் நாம் காண்பிக்கும் வாஞ்சையிலும்,தீவிரத்திலும் அந்த அர்ப்பணிப்புத் தெரிந்துவிடும். நம் இருதயம் முற்றிலும் அர்ப்பணிக்கப்படவில்லை என்றால்,நம் பற்றும் பாசமும் தேவனுடைய காரியங்களிலும்,இந்த உலகக் காரியங்களிலும் பாதி பாதியாக பிரிந்திருக்கும். நாம் வாழும் இந்த குழப்பமான காலங்களில் இருக்கும் மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால்,நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களைப் பற்றி நம் இருதயத்தை கடினப்படுத்திக் கொள்வதாகும். இப்படிப்பட்ட இருதயம் கொண்டவர்கள் தேவனுடைய தொடுதலை உணர முடியாது,அதனால் ஏராளமான கேள்விகளுக்கு விடை தெரியாமல்,இறுதியில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதையே விட்டுவிட நேரிடும். மாறாக,மென்மையான இருதயம் கொண்டவர்கள் தேவனுடைய தொடுதலை நன்றாக உணர்ந்து,தங்களுக்குள்ளும்,தங்களைச் சுற்றிலும் அவர் செய்யும் காரியங்களை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருப்பார்கள். நம் உயர்ந்த முன்னுரிமை, நம் முதல் அன்புக்கு உரியவரான இயேசுவுக்கு நம்முடைய இருதயங்களில் இடம் கொடுப்பதாகத்தான் இருக்க வேண்டும்.

அறிக்கை: எல்லாக் காலத்திலும் என் இருதயத்தைக் காத்துக்கொள்வேன்.

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in