கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

12 ல் 1 நாள்

அழைப்பு

கிறிஸ்துவை அறிவது என்பது முக்கியமான ஒன்று, அதேசமயம் அவரை நம் வாழ்க்கையில் கர்த்தராகவும்,இரட்சகராகவும் இருக்க அழைப்பது இன்னொன்று. அவரைப் பின்பற்றுவது என்பது மற்றுமொன்று. அதற்குக் குறிப்பிட்ட அளவு அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அவசியம். கூகுள் மேப் உதவியுடன் இதற்கு முன்பு சென்றிராத ஒரு இடத்திற்கு, நீங்கள் அறியாத பாதையில் பயணம் செய்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போக அதில் வரும் குரல் கொடுக்கும் எல்லாக் குறிப்புகளையும் கவனமாகக் கேட்டுப் பின்பற்ற வேண்டும். அந்தச் செயலி சில பிழைகள் காரணமாக உங்களைச் சில சமயங்களில் தவறான இடத்திற்குக் கூடக் கொண்டு செல்லலாம்,ஆனால் இயேசு ஒருபோதும் தவறாக வழிநடத்தமாட்டார். ஒருவேளை பாதை மாறி அவர் உங்களை அழைத்துச் செல்வதாகத் தோன்றலாம்,ஆனால் அவர் உங்களை நடத்திச் செல்லும் இடம் எதுவாக இருந்தாலும்,அவரே உங்களோடு இருப்பார்.

இன்று நாம் சமூக ஊடக யுகத்தில் வாழ்கிறோம். நாம் யாரைப் பின்தொடர்கிறோம்,நம்மை யார் பின்தொடர்கிறார்கள் என்பதைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். நமக்கு ஒத்துவராத ஒன்றை நாம் பின்தொடரும் ஒருவர் பகிர்ந்துகொண்டால்,அவரைப் பின்தொடராமல் (unfriend) விட்டுவிடலாம். நம்மைப் பின்தொடரும் ஒருவர் தன் சவுகரியத்திற்காக அளவுக்கு மீறி நெருங்குவதாகத் தெரிந்தால் அவர் நம்மைப் பின்தொடராதபடிச் (block) செய்துவிடலாம். ஆனால்,இயேசுவோடு முற்றிலும் பின்னிப் பிணைந்த வாழ்க்கை இதிலிருந்து மிகவும் மாறுபட்டது! அதற்கு,அவர் சொல்வதன்படி வாழ்வதும்,எல்லாவற்றிற்கும் அவரையே முழுமையாகச் சார்ந்துகொள்வதும் அவசியம்! நீங்கள் அவரைப் பின்தொடராமலோ, அவர் உங்களைப் பின்தொடரவிடாமலோ இருந்தால்,அவர் உங்களுக்காகத் திட்டமிட்டிருக்கும் அனைத்தையும் இழந்துவிடும் நிலைக்கு ஆளாகக் கூடும். இருப்பினும்,அவர் உங்களுக்காகத் தொடர்ந்து காத்திருப்பார். வாழ்க்கைக் கடினமானதாக இருப்பதாகத் தோன்றினாலும்,தேவன் உங்கள் இருதயத்தின் கடினமான பகுதியைக் கையாள்வதாக உணர்ந்தாலும்,தொடர்ந்து அவரைப் பின்பற்றத் தீர்மானியுங்கள். அவருடைய குணமாக்கும் தொடுதலையோ,உணர்த்துவிக்கும் சத்தத்தையோ எதிர்க்கத் தோன்றினால் கூட,அவர் நம்மைத் தம்மிடமாகச் இழுத்துக்கொள்வதை நிறுத்துவதே இல்லை. அவரைப் பின்பற்றுவதற்கு,அவருடைய மென்மையான வழிநடத்துதலை அறிய வேண்டும். அதற்கு உதவியாக நம்முடைய உணர்வுகளை விழிப்பாகக் காத்துக்கொள்ள,கூடுமானவரை அவரை நெருங்கி வாழ்வது அவசியம்.

அறிக்கை: எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் இயேசுவைப் பின்பற்றுவேன்

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in