கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

முழுமனதோடும் அவரைப் பின்பற்றுங்கள்
இன்று காணப்படும் வியாதிகளில் மிக அதிகமான வியாதிகள் நம் மனதுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இன்று மனநலம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால் நம்முடைய எண்ணங்களையும் யோசிக்கும் விதங்களையும் மாற்றிக் கொள்ள அவ்வப்போது நம் மனம் புதுப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்ற இசைந்திருக்கும் மனம் அவரால் மாற்றப்படத் தன்னை விட்டுக்கொடுக்கும். சிந்தனைத் தடைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது,குறிப்பிட்ட சில மக்கள்,கலாச்சாரங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் குறித்து முன்னமே தீர்மானித்த கருத்துக்களையும் யோசனைகளையும் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாகும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் அன்புடனும்,ஒற்றுமையுடனும் வாழும் வாழ்க்கையை இத்தகைய சிந்தனைத் தடைகள் நாசமாக்கி விடும். ஆகவே,தேவபக்தியுள்ள கண்ணோட்டத்துடன் வாழ, மக்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றி வைத்திருக்கும் நம் எண்ணங்களை தேவன் புதுப்பிக்க விட்டுக்கொடுப்பது அவசியம். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டிருக்க வேண்டும்,அது படிப்படியாக பரிசுத்த ஆவியினால் மறுரூபமாக்கப்படும் சிந்தையாகும். நம்முடைய மனங்கள் நம் இருதயங்களின் வாஞ்சைகளையும்,நம் உணர்வுகளையும் உந்தித்தள்ளுவதாக இருக்கின்றன. ஆகவே,பழைய,அநாவசியமான மற்றும் தீமையான எண்ணங்களை மாற்ற நம் மனம் பழுதுபார்க்கப்படுவது அவசியம்.
இயேசுவைப் பின்பற்றும் நாம் எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரச்சனை,அறிவுபூர்வமான மற்றும் பாதுகாப்பான காரியங்களை நம் மனம் யோசித்துக் கொண்டிருப்பதாகும். நம் பொருளாதாரம்,வளங்கள்,நிபுணத்துவம்,மனித உறவுகள்,ஆரோக்கியம் போன்றவற்றில் குறைவு ஏற்படும்போது,தேவன் தம்மால் மட்டுமே செய்ய முடிந்ததை நமக்காகச் செய்வார் என்று விசுவாசிப்பதை விட்டு,இந்தக் குறைவுகளின் பக்கம் நம் கவனம் திரும்பிவிடுகிறது. பயத்திற்கு இடம் கொடுக்காமல் விசுவாசிப்பதுதான் நம் மனதிற்குத் தேவையானது!
மனதைப் புதுப்பித்து மீட்கும் தூதுவர் பரிசுத்த ஆவியானவரே. அவர் நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு சூழ்நிலையின் மூலமாகவும் கிரியை செய்து,நம்முடைய சிந்தனை வாழ்க்கையை உருவாக்குகிறார். நீங்களும் இயேசுவைப் போலச் சிந்திக்கும்படி,உங்கள் மனதில் கிரியை செய்ய அவரை அழைப்பீர்களா?
அறிக்கை: என் மனம் கிறிஸ்துவினால் புதுப்பிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தைப் பற்றி

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
