கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

உங்கள் முழு ஜீவனோடும் பின்பற்றுங்கள்
நாம் எந்த அளவுக்கு வசதியாக தேவனை அவருடைய முழுத்தன்மையுடன்,முற்றிலுமாகப் பின்பற்றுகிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய முழு ஜீவனோடு அவரைப் பின்பற்றத் தனிப்பட்ட விதத்தில் அர்ப்பணிப்பது அவசியம். அதாவது,நம்முடைய வார்த்தையினால் மட்டுமல்ல,நினைவினாலும்,செய்கையினாலும் கூட இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அதற்காக,எந்த இடத்தில் அவரை உண்மையாகப் பின்பற்றுவதற்கான நம் அர்ப்பணிப்பில் குறைவிருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் நமக்குள் ஆழமாகச் சென்று பார்ப்பது அவசியம். பல நேரங்களில்,இயேசுவை பல தலைமுறைகளாக அறிந்தவர்கள் சரியான வேதவசனங்களைச் சொல்வார்கள்,சரியான விதத்தில் ஜெபிப்பார்கள்,ஆனால் அவர்களுடைய இருதயமோ தேவனை விட்டுத் தூரமாக இருக்கும். சில நேரங்களில்,நம் விசுவாசப் பயணத்தைப் புதிதாகத் தொடங்கும்போது,எல்லாவற்றையும் முழு இருதயத்தோடு செய்வோம்,தேவன் எங்கு நடத்திச் செல்கிறாரோ அங்கு செல்ல ஆயத்தமாயிருப்போம். ஆனால்,நாம் கிறிஸ்துவோடு வாழத் தொடங்கிய புதிய வாழ்க்கையைக் காத்துக்கொள்ள நம்முடைய மனம் புதிதாக்கப்படுவதில்லை. ஆகவே,தேவனைப் பின்பற்றுவதில் எங்கு தடுமாறுகிறோம் என்பதை அறிய பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடி,நம் வாழ்க்கையின் அந்தப் பகுதியை அவர் தம் புதுப்பிக்கும் ஆற்றலாலும் வல்லமையாலும் புதுப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்வது மிகவும் அவசியம்.
அறிக்கை: தேவ ஆவியானவர் எனக்கு எல்லாவற்றிலும் உதவி செய்வார்.
இந்த திட்டத்தைப் பற்றி

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
