கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

12 ல் 2 நாள்

பின்பற்றுவதில் உள்ள தியாகம்

இயேசுவைப் பின்பற்றுவதற்கு குறிப்பிடத்தக்க அளவு சுயமறுப்பும்,தியாகமும் அவசியம். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு நேரிடுவது என்ன என்று இயேசு தம் சீஷருக்குச் சொன்னபோது,பூசி மெழுகியோ அல்லது காரியங்கள் இலகுவாக இருக்கும் என்றோ சொல்லவில்லை. மாறாக,தம்முடைய சீஷராக இருக்க விரும்புபவர்கள் தங்களையே வெறுத்து,அனுதினமும் தங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு,தம்மைப் பின்பற்ற வேண்டும் என்றே கூறினார். இயேசு தாமே தம் சிலுவையைச் சுமந்து கொண்டு, ஒரு மலைமீது ஏறி,முழு உலகத்தின் பாவங்களுக்காகவும் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் இப்படிச் சொன்னார்.

ஆகவே,நம்மைப் பொறுத்தவரை,நம்முடைய சிலுவை எப்படிப்பட்டது?

இயேசுவைப் பொறுத்தவரை,சிலுவை என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை. அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது,ராஜ்யத்தின் மிகப் பளுவான வேலை; ஆனால் அவர் அதை மனமுவந்து தம்மீது ஏற்றுக்கொண்டார். அவரைப் பின்பற்றும் நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் நம் சிலுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் தேவனே கொடுத்த ராஜ்யத்தின் குறிப்பான வேலை ஒன்று உண்டு. அந்த வேலை நாம் இந்த உலகத்தில் பிறக்கும் முன்னரே நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது,அந்த வேலை என்ன என்பதை வெளிப்படுத்தவும்,அதை நாம் விளங்கிக் கொள்ளவும் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார்.

அந்த வேலையே உங்கள் வாழ்க்கையின் நோக்கமாக மாறும்,உங்களுடைய ஆற்றல்கள் மற்றும் வாஞ்சைகளின் பெரும்பகுதி அதை நோக்கியே இருக்கக் காண்பீர்கள்.

உங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு,இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு உங்கள் சவுகரியங்களைத் தியாகம் செய்து,அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, நீங்கள் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டீர்களோ அதைச் செய்ய வேண்டும் என்று அர்த்தமாகிறது.

நமக்குக் கொடுக்கப்பட்ட ராஜ்யத்தின் வேலையைச் செய்வதற்கு, பெரும்பாலும் நமக்குப் பழக்கமான சவுகரியங்களை விட்டுக்கொடுத்து,எதுவும் நம்மைப் பிடித்து இழுக்க இடம் கொடுக்காமல் தேவனுக்கு விடுதலையோடு ஊழியம் செய்வது அவசியமாகிறது. நமக்கு நியமிக்கப்பட்ட வேலையின் பாரம்,நாம் கிறிஸ்துவோடு ஒன்றாக இருப்பதால் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் தேவ மகிமைக்கு ஏற்றதாக இருக்கும். தேவமகிமை கனமானது,நமக்குக் கொடுக்கப்படும் ராஜ்யத்தின் வேலையை ஒப்புக்கொள்ளத் தீர்மானிக்கும் நாம் அதன் கனத்தை உணருவோம் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. அதற்கே உரிய சவால்களும்,வெற்றிகளும் அதைத் தொடர்ந்து வரத்தான் செய்யும். அவை அனைத்திலும்,நம்மோடு இருப்பதாக இயேசு வாக்குப்பண்ணி இருக்கிறார்!

அறிக்கை: எனக்கு நியமிக்கப்பட்ட ராஜ்யத்தின் கனமான வேலையைச் செய்ய இயேசு எனக்கு உதவுகிறார்.

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in