இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

அவரைப் பின்பற்றும் இருவர் எம்மாவு ஊருக்கான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இயேசு மர்மமாக நடந்து கொண்டார். தன்னை அவர்களுக்குக் காட்டவில்லை. அவருடனே சேர்ந்து அவர்களது சிந்தனைகளையும் உணர்வுகளையும் அலசிப்பார்க்க அனுமதித்தார். பின்னர் அவர் மோசேயின் காலம் முதல் தீர்க்கதரிசிகள் காலம் வரை இருந்த உண்மைகளைச் சொல்லி அவற்றுக்கு இடையில் உள்ள புள்ளிகளை இணைக்க உதவினார். அவர் வந்தது ஏன்,மரித்து உயிர்த்தது ஏன் என்று விவரித்தார். அவர் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது,அவர்களுக்குள்ளே அவர்களது இருதயங்கள் கொளுந்துவிட்டு எரிவதை உணர்ந்தார்கள்.
இதைத் தான் உயிர்த்தெழுந்த இரட்சகர் செய்வார். அவரது ஆவியானவர் நம்முடன் துணையாக இருந்து,அவரது வார்த்தையின் மறைபொருட்களை நமக்கு வெளிப்படுத்துவார். நம் வாழ்வின் புள்ளிகளை இணைத்து நமக்கு ஏற்படும் நிகழ்ச்சிகளுக்கான அர்த்தத்தை விளங்கச் செய்வார். நமது இருதயத்துக்குள்ளே ஒரு பற்றி எறியும் வாஞ்சையைப் போடுவார். உயிர்த்தெழுந்த கடவுளின் ஆவி நமக்குள்ளும் நம் மூலமாகவும் அசைவாடாமல் நம்மால் வாழ முடியாது.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
ஒரு உயிர்த்தெழுந்த வாழ்வை வாழ நீங்கள் ஆயத்தமா?
கடவுளின் ஆவியானவர் உங்களை இந்த வருடத்தின் எஞ்சிய நாட்களில் வழிநடத்துவதற்கு அவருக்கு இடம் கொடுப்பீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
