இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 34 நாள்

நாம் பாடுகளைப் பற்றி விளக்குகிறோம். அல்லது அதைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சியாவது செய்கிறோம். ஆனாலும் பல நேரங்களில் நாம் கடந்து செல்கிறவற்றுக்குள் ஏன் செல்கிறோம் என்பதைப் பற்றிய விளக்கமே இருப்பதில்லை. ஆனாலும் அமைதியாக இருப்பதும் கடவுள் நம்மில் துவங்கிய தன் பணியைச் செய்யவும் அதன் மூலம் நம்மிலும் நம் மூலமாகவும் அவரது பெயருக்குப் புகழ் வர வைக்க அனுமதிப்பதுவுமே சிறப்பாக இருக்கும். ஏற்றுக் கொள்ள இது கடினமாக இருந்தாலும் வெற்றியைவிட பாடுகள் தான் நமக்கு அதிக நன்மையைச் செய்கின்றன. அது நமது கரடுமுரடான பகுதிகளை புதுப்பிக்கின்றது. பொறுமையைக் கட்டி எழுப்புகிறது,நமது ஜெப வாழ்க்கையைப் பெருகச் செய்கிறது. நம் வாழ்வில் கடவுளின் செயல்பாட்டுக்கு அதிக உணர்வுள்ளவர்களாக்குகிறது. இன்றைய வேதப்பகுதியில் காணப்படும் மனிதனைப் போல உங்கள் வாழ்வில் இருந்த பாவம் அல்லது உங்கள் குடும்பத்தின் பாவங்கள் தான் உங்கள் பாடுகளுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.இயேசுவிடம் வந்து இந்த சாத்தியமில்லாத சூழ்நிலையில் அவரது மகிமையை எப்படிக் கொண்டுவருவார் என்று கேட்பது உங்களுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நீங்கள் எப்போதாவது பாடுகள் காரணம் இல்லாமல் வருகின்றன என்று உணர்ந்திருக்கிறீர்களா?
உங்கள் வாழ்வின் காலங்களில் எதிலாவது மகிமை ஏற்பட்டிருக்கிறதா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/