இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 38 நாள்

இயேசு தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக சிலுவையில் தொங்கினார். தாங்கள் செய்கிறது என்னதென்று அறியாமல் இருந்த மக்களுக்காக அவர் இந்த தியாகத்தைச் செய்தார். அவரது கடைசி நிமிடங்களில் இயேசு தன்னுடன் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருடன் உரையாடினார். இயேசு யார் என்று நன்றாக அறிந்திருந்த இந்த நபர்,அவர் குற்றவாளிகளுடன் கொலை செய்யப்படுவது அநியாயம் என்று கூறினார். இயேசுவிடம் அவர் வைத்த வேண்டுகோள் அவரது நித்தியத்தையே மாற்றிப்போட்டது. இயேசு தனது ராஜ்யத்தில் வரும்போது தன்னை நினைவில் வைத்திருக்கும்படி அவர் கேட்டார். இயேசுவும் அவர் பரதீசில் உடன் இருப்பார் என்று உறுதியளித்தார். இது எத்தனை பெரிய உறுதி! இந்த இடத்துக்குத் தான் இயேசுவில் விசுவாசமாயிருக்கும் ஒவ்வொருவரும் இறுதிவரை நிலைத்திருந்தால் போவார்கள்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
இயேசுவில் இருக்கும் நித்திய வாழ்வைப் பற்றிய உறுதி உங்களுக்கு இருக்கிறதா?
உங்கள் வாழ்வை மீண்டும் முழுவதுமாக மறு அர்ப்பணிப்பு செய்ய வேண்டியது இருக்கிறதா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/