இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 37 நாள்

இயேசு ஒரு தனித்தன்மையுள்ள உரையாடல் முறையை வைத்திருந்தார். மிகவும் சரியான நேரத்தில் அவர்களைப் பிடித்து உடனடியாக அவர்களுடன் மிகவும் ஆழமான உரையாடலுக்குள் சென்றுவிடுவார். அவர் சுற்றி வளைத்துப் பேசியதில்லை. வார்த்தை ஜாலங்கள் செய்ததில்லை. ஆனால் நெற்றியடியாகத் தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுவார். சமாரியப் பெண்ணிடம் அவர் உரையாடியபோதும் அப்படியே நடந்தது. தன்னைப் பற்றிய பெரிய அறிக்கை ஒன்றை இயேசு செய்தார்,“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் ஏற்படுவதில்லை. உண்மையிலேயே நான் கொடுக்கும் தண்ணீரானது அவர்களுக்குள் ஊற்றாக மாறி நித்திய காலம் வரை பொங்கும்” என்றார். அந்த சமாரியப் பெண் ஐந்து தடவைகள் திருமணம் செய்திருந்தார். இப்போதும் இன்னொரு நபருடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் உன்னதமான ஒன்றுக்காக தாகத்துடன் இருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் தற்காலிகமாகத் தனது பசியை உடலளவிலான உறவுகளால் தீர்த்துக் கொண்டிருந்தார். இயேசு நேரடியாக பிரச்சனைக்குள் வந்தார். தான் மட்டுமே ஆழமான தேவைகளைத் தீர்க்க முடியும் என்றார்.

நாமும் அந்த பெண்ணைவிட வித்தியாசமானவர்கள் அல்ல. நாம் அடிக்கடி நமக்குள் இருக்கும் ஆழமான தேவைகளை தற்காலிகமானவற்றால் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் உண்மையிலேயே இயேசு தான் அந்த தேவைகளைத் தீர்க்க நமக்கு இருக்கிறார். இல்லையென்றால் நாம் இந்தக் காலத்தின் செல்வங்கள்,வெற்றிகள்,பெருமைபோன்ற தவறான தெய்வங்களை வணங்கத் துவங்கிவிடுவோம்.நாம் கடவுளை ஆவியோடும் உண்மையோடும் மட்டுமே வணங்க முடியும். நாம் நம்மை முழுமையாக வெறுமையாக்கி அவர் நம்மை நிரப்ப விட வேண்டும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என் வாழ்க்கை எங்கே வெறுமையாக இருக்கிறது?
எனது ஆராதனை கடவுளை நோக்கி இருக்கின்றதா அல்லது பொருட்களையும் நபர்களையும் நோக்கி இருக்கின்றனவா?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/