இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 39 நாள்

இயேசு பிலாத்துவுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். பிலாத்துவோ இந்த தீர்ப்பில் ஈடுபடக்கூடாது என்று விரும்பினார். இயேசுவைக் குறுக்குக்கேள்வி கேட்டபோது அவர் ஒரு அரசனா என்று கேட்டார். ஆனால் இயேசுவோ தான் இந்த உலகத்துக்கு உண்மையைப் பற்றி சாட்சி கொடுக்க வந்ததாகச் சொன்னார். உண்மையின் பக்கமாக இருக்கும் அனைவரும் அவர் சொல்பவற்றைக் கேட்பார்கள் என்றும் சொன்னார் இயேசு. பிலாத்து உண்மை என்றால் என்ன என்று உடனடியாகக் கேட்டார். நம் ஒவ்வொருவரிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டிருந்தால் எத்தனை விதவிதமான பதில்கள் வந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நாம் வாழும் இந்த உலகத்தில் முழுமையான உண்மை என்று எதுவும் இல்லை. எதுவும் கருப்பு வெள்ளையாக இல்லை. ஏனென்றால் சாம்பல் நிறமானது பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. உண்மையானது நீர்த்துப் போய்விட்டது. மங்கிப் போனது. எப்போதுமே மாறிக்கொண்டிருக்கின்ற நிஜத்தை உடைய கலங்கிப்போன கலாச்சாரமே இதற்குக் காரணமாகும். உண்மை என்பது ஒரு நபராவார். இயேசுவே வழியும்,சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார். இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வதால்அவர் நம் வாழ்வின் பல பகுதிகளை புதுப்பித்து மாற்றுகிறார். அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார். இந்த இணைப்பானது நெருக்கமானதும் இயற்கையானதுமாகும். ஆகவே நாம் இயேசுவைப் போல சிந்திக்கத் துவங்குகிறோம்,அவரைப் போல செயல்படுகிறோம்,அவர் பார்ப்பது போல மற்றவர்களைப் பார்க்கத் துவங்குகிறோம். நாம் ஒருபோதும் பழைய நபர்களாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் சத்தியம் நம்மை உண்மையாகவே வாழ்வை வாழ்வதற்கென்று விடுதலையாக்கியிருக்கிறது. முழுமையான,நேர்மையான,சரியான பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கையை கடவுள் நம்மை வைத்திருக்கும் இடத்தில் வாழ்வதற்காக இந்த விடுதலை நமக்குக் கிடைத்திருக்கிறது.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
கடவுளுக்கு முன்பாக நான் நேர்மையாக இருக்கிறேனா?
அவரது வார்த்தையின் உண்மையானது என் வாழ்க்கையை வடிவமைக்கிறதா அல்லது கலாச்சாரம் என் வாழ்வை வடிவமைக்கிறதா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/