இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இந்தப் பெண் இயேசுவிடம் இழுத்து வரப்பட்டு பொதுவில் நியாயத்தீர்ப்பு வழங்கப்பட ஒரு கூட்டமானது வந்தது. இவர்களே பரிபூரண வாழ்வு வாழாதவர்கள்,இவார்கள் இப்படிச் செய்தது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அந்தப் பெண் அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் நடுங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். அப்போது தான் இயேசு அந்தப் பெண்மணியின் மேல் கவனத்தை செலுத்தாமல் குனிந்து தரையில் எதையோ எழுதினார். பாவமில்லாதவர்கள் அந்தப் பெண்ணின் மேல் முதலாவது கல்லெறியட்டும் என்றார் இயேசு. ஒவ்வொருவராக அங்கிருந்தவர்கள் போய்விட்டார்கள். அந்தப் பெண்மட்டுமே அங்கே நின்றிருந்தார். இயேசு அந்தப் பெண்ணை விட்டுவிட்டார்,ஆனால் ஒரு நிபந்தனையையும் அத்துடன் சொன்னார், “போ இனி பாவம் செய்யாதே.”
இயேசுவே கிருபைக்கும் உண்மைக்குமான உன்னதமானவர். அவர் யாரையும் குற்றம் தீர்க்கவில்லை,ஆனால் அவர் அவர்களைக் கண்டித்து உணர்த்தாமலும் விடவில்லை. பரிசுத்த ஆவியானவர் இதையை இன்றும் நமக்குச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை மாய்மாலமாக இருப்பதில் இருந்தும் தீர்ப்பு செய்வதில் இருந்தும் தடுக்கிறார். நம்மில் இருக்கும் பாவ உணர்வுகளைப் பற்றி எச்சரித்து நம்மை உண்மையான மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துகிறார்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நான் மற்றவர்களைக் குற்றப்படுத்துகிறேனா?
மற்றவர்களைக் குற்றம் தீர்க்காமல் இருக்க என்னை அர்ப்பணிக்க முடியுமா?என்னை இன்னும் உற்று நோக்க முடியுமா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
