இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 32 நாள்

அன்பை நீங்கள் எப்படி அளக்கலாம்?இயேசு சொல்வதின்படி,அதிகம் மன்னிக்கப்பட்டவர்கள் அதிகம் அன்பு செய்வார்கள். குறைவாக மன்னிக்கப்பட்டவர்கள் குறைவாக அன்பு செய்வார்கள். இயேசு பங்கேற்ற ஒரு விருந்துக்கு மிகவும் மோசமான நடத்தையுள்ள ஒரு பெண் யாரும் அழைக்காமலேயே வந்தார். அவரைத் தன் கண்ணீரினாலும் பின்னர் விலையுயர்ந்த வாசனைப்பொருளாலும் அபிஷேகித்தார். ஒரு கடவுளின் பிரசன்னத்தில் தான் நிற்பதை இந்தப் பெண் அறிந்திருந்தார். அவர் மட்டுமே தன்னை அறிந்திருக்கிறவர்,அவரால் மட்டுமே தன்னை முழுவதுமாக மன்னிக்க முடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவரது மன்னிப்பைப் பற்றி அறிந்திருந்தது அவரை அசைத்தது. பெரும் அர்ப்பணிப்பையும் தன்னைத் தானே விட்டுக் கொடுக்கும் தாராளமான மனதையும் கொடுத்தது. வேறு எதுவும் தன்னைத் தானே வெறுத்து அந்த அளவுக்கு அவரை ஆராதிக்கச் செய்திருக்க முடியாது.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
ஆராதனை என்பது உங்களுக்கு எப்படிப்பட்டதாகத் தோன்றுகிறது?
இயேசுவின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை உங்களால் விவரிக்க முடியுமா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/