இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 1 நாள்

வேதாகமம் முழுவதிலும் நாம் செய்யவிருக்கும் 40 நாள் பயணத்தில்,கர்த்தருக்கும் மனிதருக்கும் முகம் முகமாக நடந்த சந்திப்புகளை நாம் பார்க்கவிருக்கிறோம் (இவற்றில் ஆண்களும் பெண்களும் உண்டு). இந்த சந்திப்புகளில்,இந்த சாதாரண மனிதர்களிடம் இருந்து கர்த்தர் எதிர்பார்த்தது என்ன என்பதையும்,அவர்கள் கர்த்தருக்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதையும் நாம் பார்க்கவிருக்கிறோம். இவை எல்லாம் உண்மையான உலகத்தின் உண்மையான உரையாடல்கள் ஆகும். இவைகள் மக்களைக் கர்த்தர் யார் என்ற புதிய வெளிப்பாட்டுடன் அனுப்பி வைத்தவை. அவரை இன்னும் சிறப்பாக அறிந்து கொள்வது எப்படி என்பதைக் காட்டியவை.

இன்று திரியேகக் கடவுள் (ஏலோகிம்) ஆதாம் ஏவாளுடன் ஏதேன் தோட்டத்தில் நடந்து அவர்களது பாதுகாப்புகும் நீண்ட நாள் மகிழ்ச்சிக்குமான எளிய அறிவுரைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது நோக்கத்தை அவர்கள் சந்தேகித்தார்கள். அவரது அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். அவருடன் அவர்கள் அனுபவித்து வந்த உறவை இழந்து போனார்கள்.

கடவுள் ஆதாமை மண்ணில் இருந்து உருவாக்கி “நீங்கள் பலுகிப் பெருகி,பூமியை நிரப்பி,அதைக் கீழ்ப்படுத்தி,சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும்,பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.ஆதியாகமம் 1:28

அவர் ஏவாளை ஆதாமின் விலாவில் இருந்து உருவாக்கி ஆதாமுக்கு உதவியாக இருக்கும் பணியைக் கொடுத்தார். அதன் பின்னர் வந்த வீழ்ச்சியானது, இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும் வரைக்கும் இந்த செயல்பாடுகளை தலைகீழாக மாற்றியது. அவரது மீட்பின் வல்லமையின் ஒரு நிழலானது ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம் 21 ஆம் வசனத்தில் காணப்படுகிறது. அங்கே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் தோல் உடைகளை உருவாக்கிக் கொடுத்தார். அவற்றை உருவாக்க நிச்சயமாக இரத்தம் சிந்தப்பட்டிருக்க வேண்டும். இயேசுவின் குற்றமில்லாத இரத்தம் நமது பாவங்களை நித்திய காலத்துக்கும் மறைத்து நம்மை மாசற்றவர்களாக சுத்தப்படுத்துகிறது. அவரது மகனாகிய இயேசுவின் மூலம் நாம் அவருடன் நெருக்கமாக செல்லுவோமா அல்லது கைக்கு எட்டும் தூரத்தில் அவரை வைத்துக் கொள்வதில் திருப்தியடைவோமா என்பதுவே நமக்கு முன்பாக இருக்கும் கேள்வியாகும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நீங்கள் எப்போதாவது கடவுளின் குணத்தை சந்தேகப்பட்டிருக்கிறீர்களா?
கடவுளுடனான உங்கள் உறவானது எதன் மூலம் உந்தப்படுகிறது?பயத்தினாலா அல்லது அன்பினாலா?
நீங்கள் கடவுளுடன் நெருங்கிய உறவைவிட உங்களது சொந்த வசதியைத் தேர்ந்தெடுப்பீர்களா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/