இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 35 நாள்

மார்த்தாள் தன் வீட்டை இயேசுவுக்குத் திறந்து கொடுத்திருந்தார். அவருக்கு என்று அனைத்தும் ஒழுங்காக இருந்தனவா என்று உறுதிபடுத்தியிருந்தார். அவர் ஒரு நல்ல விருந்து உபச்சாரக்காரர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அவரது சகோதரியாகிய மரியாளோ இயேசுவின் பாதப்படியில் உட்கார்ந்திருந்து அவர் பேசக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரே தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டதாக இயேசு சொன்னார். தரையில் உட்கார்ந்திருந்து தன் நேரத்தை நகர்த்துவது எப்படி நல்ல பங்காக மாறும்?

இன்று நம்மில் பலர் புரிந்து கொள்ளாத ஒன்றை மரியாள் கண்டுபிடித்திருந்தார். அதுவே இயேசுவுடன் இருப்பதுவே இயேசுவுக்காக எதையாவது செய்வதைவிட முக்கியமானது என்ற உண்மை தான். நாம் ஆலயத்தில் சேவை செய்யலாம்,வாரம் முழுவதும் வசதியில்லாதவர்களுக்காக நல்ல செயல்களைச் செய்யலாம். பிரசங்கம் கூடச் செய்யலாம். ஆனால் கடவுளுடன் இருக்க வேண்டிய நேரத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால்,அவரது சத்தத்தைக் கேட்க நேரம் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் நட்டமாக முடியும். வேதாகமத்தை வாசித்து தொடர்ந்து ஒழுங்காக ஜெபம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். அவரது சத்தத்தைக் கேட்கும் நேரமாக நமது அமைதி வேளையைத் தவறாமல் கடைப்பிடிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதுவே இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் என்ற முறையில் நம்மை அடுத்த நிலைக்கு ஆன்மிக வாழ்வில் கொண்டு செல்லக்கூடியது ஆகும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்வி:
இன்று நான் ஐந்து நிமிட நேரம் அமைதியாக அமர்ந்திருந்து கடவுள் என்னிடம் பேசுவதைக் கேட்க முயற்சிப்பேனா?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/