இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 33 நாள்

சகேயு ஒரு பாவி என்று அவரது மக்களாலேயே கருதப்பட்டார். ஏனென்றால் அவர் ஒரு வரி வசூலிப்பவர். தனது சொந்த மக்களிடமிருந்தே வரி வசூலித்து,ரோமர்களுக்குக் கொடுப்பவர். அனைத்து நோக்கங்களிலும் செயல்களிலும் அவர் ஒரு துரோகியாகப் பார்க்கப்பட்டார். ஆனாலும் இயேசு அவரை அவருடைய வீட்டுக்கே அழைத்து நேரம் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த நாளில் சகேயு புதிய நம்பிக்கையுடன் தனது புதிய வாழ்க்கையைப் பற்றி பொதுவாக அறிக்கையிட்டார். இந்த வாழ்வானது தனிப்பட்ட நேர்மையும் பொதுவாழ்வில் தாராளமனமும் ஆகும். ஏன் இத்தனை திடீர் என்று மனசாட்சி அவரைத் தாக்கியது?ஏன் பொதுவாக மக்கள் கணக்குக் கேட்கும் வகையில் அறிக்கை செய்தல் என்ற பெரும் பாரத்தை ஏற்றுக் கொண்டார்? இயேசு சகேயுவுக்கு என்று நேரம் கொடுத்தார். அவருடனும் அவர் நண்பர்களுடனும் அவர்கள் எல்லாவற்றிலும் மாற்றம் பெற்றதினால் அவர்களை நேசித்தார் என்று சொல்லியிருந்தால் அது பாதுகாப்பானதாக இருந்திருக்கும். இவர்கள் அனைவருமே வெறுக்கப்பட்டவர்கள். அவரைப் போன்றவர்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்க விரும்புவதில்லை. ஆனால் ஒரு போதகர்,சமூகத்தில் வெளியே தெரியாதவர்களைக் காணும் கண்கள் உள்ளவர்,அவர்களது வட்டத்துக்குள் தன்னையே அழைத்துக் கொண்டதன் மூலம்அனைத்தையும் மாற்றினார்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என் ஊரில் இருக்கும் வெளியே பார்க்க முடியாத,ஒதுக்கப்பட்ட,வெறுக்கப்பட்ட,பாதிக்கப்பட்ட மக்களைக் காண நேரம் ஒதுக்குகிறேனா?
அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பைக் கொண்டு செல்லும் வாய்க்காலாக மாறுவதற்காக அவர்களை என் வாழ்க்கைக்குள் நான் வரவேற்கிறேனா அல்லது அவர்களது வாழ்க்கைக்குள் நான் நுழைகிறேனா?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/