இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 4 நாள்

கடவுள் ஆபிரகாமுடன் ஒரு நண்பனுடன் உரையாடுவது போலவே உறவு கொண்டிருந்தார். தன் உறவினனாகிய லோத்துவை அவருக்கான நிலப்பரப்பைத் தானே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தபோது,கடவுளே அவரிடம் பேசி,தனது பிரசன்னத்தைத் தருவதாக வாக்குக் கொடுத்தார். அவரது சந்ததியினர் பெருமளவில் பெருகுவார்கள் என்ற உறுதியையும் கொடுத்தார். பார்வைக்கு செழிப்பான யோர்தான் பகுதியைத் தேர்ந்தெடுத்தார் லோத்து. அங்கே சோதோம்,கொமோரா பட்டணங்கள் இருந்தன. ஆபிரகாமோ வனாந்தரமான கானான் பகுதியில் குடியிருந்தார். ஆபிரகாமின் தாராள மனதிற்காகவும் தன்னலம் இல்லாத மனதுக்காகவும் கடவுள் அவருக்கு பரிசளிதார். அவரையும் அவர் குடும்பத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்று தூதர்கள் அவரை சந்தித்தபோது அவருக்கு வாக்குக் கொடுக்கப்பட்ட மகன் விரைவில் அவருக்குக் கிடைப்பான் என்றார்கள். நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்றனர். மோசமான சோதோம் பட்டணத்தைப் பற்றிய தனது திட்டத்தை ஆபிரகாமிடம் சொல்லலாமா என்று கடவுள் தனக்குத் தானே விவாதித்துக் கொண்டார். அவருக்குச் சொல்லுவதையே கடவுள் தேர்ந்தெடுத்தார். அதன் விளைவாக தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க ஆபிரகாம் கடவுளுடன் பேரம் பேசிய நிகழ்ச்சி நடந்தது. கடவுள் ஆபிரகாமின் பேரத்தை ஏற்றுக் கொண்டார்,ஆனால் சோகம் என்னவென்றால் சோதோமும் கொமோராவும் குறைந்த அளவு நீதிமான்கள் கூட இல்லாத நிலையில் முற்றிலுமாக அழித்துப்போடப்பட்டது.

ஆபிரகாமின் வாழ்வில் இருந்து பெரிய கருத்தானது கடவுளுடனான நெருக்கமானது தொடர்ந்து சென்றதுமான நட்பு ஆகும். இது நீண்ட காலம் காத்திருக்கும்,விசுவாசிக்கும் சூழலிலும் செழித்து வளர்ந்தது. தனது குடும்பத்தையும் சொந்த இடத்தையும் விட்டு விசுவாசத்தினால் வெளியேறி முன்பு தனக்குத் தெரியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் செல்வது எளிதானதல்ல. ஆனாலும் அவர் உறுதியுடன் அதைச் செய்தார். தன்னை அழைத்த கடவுள் தான் கொடுத்த வாக்குகளை எல்லாம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நீண்ட காத்திருத்தலில் இருந்திருக்கிறீர்களா?
இந்த காத்திருத்தலில் நீங்கள் கற்றுக் கொண்ட சில பாடங்கள் எவை?
இந்த காத்திருத்தலில் உங்கள் விசுவாசம் வளர்ந்திருக்கிறதா அல்லது வளர்ச்சி நின்று போயிருக்கிறதா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/