இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 9 நாள்

ஒரு சிறுவன் ஆலயத்தில் முழு நேரமாக கடவுளுக்கு பணி செய்ய தனியாக அர்ப்பணிக்கப்பட்டான். ஒரு முதியவரான ஆசாரியர் அவனை சீடத்துவத்தில் நடத்தினார். இந்தப் பின்னணியில் தான் முதல் முதலாக கடவுள் சாமுவேலிடம் பேசினார். அவர் ஒரு மாபெரும் தீர்க்கதரிசியாக வளர்ந்தார். அவருடைய சொற்களில் ஒன்றும் கீழே விழவில்லை என்கிற அளவுக்கு அவர் மாபெரும் தீர்க்கதரிசியாக இருந்தார். கடவுளின் சத்தத்தைக் கேட்கும் அளவுக்கு அவர் தனது காதுகளை கூராக்கி வைத்திருந்தது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் கடவுளால் கொடுக்கப்பட்டது,ஆகவே அவற்றில் ஒன்றும் பயனில்லாததாகவும் ஆற்றல் இல்லாமலும் போயிருக்க வாய்ப்பில்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? சாமுவேலின் பணியானது எளிமையானதாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர் பணியாற்றிய மக்கள் இருதயத்தில் அலைந்து திரிந்தவர்கள். இறுதியில் தங்களுக்கு ஒரு அரசன் வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அவர்களது உள்ளான நோக்கம் இப்படிப்படதாக இருந்தது: எங்களுக்கு இனியும் சாமுவேல் மூலம் கடவுள் பேசுகின்ற ஆலோசனைகளும் வழிகாட்டுதலுமான வார்த்தைகள் வேண்டாம்.அவர்களைப் போர்க்களத்துக்கு தலைமை தாங்கிச் செல்லும் ஒருவர்,சுற்றிலும் இருக்கும் நாடுகளைப் போல தங்களை ஆட்சி செய்கின்ற அரசர்கள் வேண்டும். கடவுள் அவர்களைத் தனிப்பட்டவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க விரும்பினபோது அவர்கள் மற்றவர்களைப் போல இருக்க விரும்பினார்கள்.

அந்த நிராகரிப்பின் நடுவே நடந்து சென்றபோது கூட சாமுவேலுக்கு கடவுள் உறுதியைக் கொடுத்தார். அவர்கள் சாமுவேலை அல்ல கடவுளையே நிராகரித்தார்கள். கடவுள் சொன்னதுபோலவே செய்வதற்காக சாமுவேல் சென்றார். சவுலை இஸ்ரவேலின் முதல் அரசனாக அபிஷேகம் செய்தார். ஆனால் அதற்கு முன் அவருக்கு சட்டப்படியான எச்சரிக்கையையும் கொடுத்தார். ஒரு அரசன் மக்களிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்ப்பான் என்று விளக்கினார். சாமுவேல் தன் வாழ்க்கை முழுவதிலும் கடவுளின் சத்தத்தைக் கேட்பதற்குத் தன் காதுகளைக் கூராக்கிப் பழக்கி வைத்திருந்தார். ஆகவே அவர் ஒருபோதும் கடவுளின் ஆவியானவரிடமிருந்து தொடர்பு இல்லாமல் இருந்தே இல்லை.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
கடவுளின் சித்தத்தில் உங்களுக்கு இல்லாத எதை நீங்கள் அவரிடம் கேட்கிறீர்கள்?
பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தைக் கேட்பதில் எந்த அளவுக்கு நீங்கள் உங்கள் காதுகளைத் தீட்டி வைத்திருக்கிறீர்கள்?
உங்களது உணர்ச்சிகளுக்கு பரிசுத்த ஆவியானவருக்கு ஆளுகை கொடுத்திருக்கிறீர்களா? அவற்றை உணரவும் தேவையில்லாதவைகளை விட்டுவிடவும் உங்களுக்கு உதவ அவருக்கு அதிகாரம் கொடுக்கிறீர்களா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/