இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 3 நாள்

கடவுளுடன் பழக்கமாகவே உறவு வைத்திருந்த மனிதன் நோவா. தீமையும் அநியாயமும் தலைதூக்கியிருந்த காலத்தில் (இந்தக் காலத்தைப் போலவே) அவர் உத்தமனாக இருந்தார். கடவுள் அவரைப் பெரும் கூட்ட மக்களில் இருந்து தனக்கென்று தனியே பிரித்தெடுத்திருந்தார். உலகத்தையே அழிக்கும் வெள்ளத்துக்குப் பின்னர் உலகத்தை நிரப்புவதற்காக இவரைக் காப்பாற்றி வைத்திருந்தார். இது ஒரு சாதாரணமான அழைப்பு இல்லை. இது அறிவில்லாத ஒரு செயலைப் போல இருந்திருக்கும். கடவுள் பற்றிய சிந்தனையே இல்லாத மக்கள் வாழ்ந்த ஒரு நகரத்தின் நடுவில் பெரிய படகு ஒன்றைக் கட்டுவது என்பதை கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக அவர் சுற்றியிருப்பவர்களால் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்பார். ஆனாலும் அவர் தன்னுடன் பேசிய கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். அவர் கடவுளின் கட்டளைக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிந்தார். அவருடன் அவரது மனைவியும் மகன்களின் குடும்பமும் அனைத்து உயிரினங்களிலும் இரண்டு இரண்டு ஜோடிகளும் அவருடன் கீழ்ப்படிந்தன. இது எத்தனை பெரிய சாகசம்! ஒரு மனிதனும் அவனது குடும்பமும் செய்யக்கூடிய எத்தனை பெரிய தைரியமான செயல் இது! ஆனாலும் அவர்கள் இதைச் செய்தார்கள். அதற்குப் பதிலாகக் கடவுள் நோவாவுடன் இந்த உலகத்தை இனி வெள்ளத்தால் அழிப்பதில்லை என்ற உடன்படிக்கையைச் செய்கிறார்.

நோவாவைப் போல நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த உலகத்தில் கடவுளால் உருவாக்கப்பட்டும் அழைக்கப்பட்டும் இருக்கிறோம். நாம் அவருடன் தொடர்பில் இருக்கிறோமா என்பதைப் பொருத்தே அவரது அழைப்பைக் கேட்டு அதற்கு முழுக் கீழ்ப்படிதலுடன் நோவாவைப் போல பதில் கொடுக்க முடியுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
சமீப காலத்தில் கடவுள் உங்களுடன் என்ன பேசியிருக்கிறார்?
அவரது கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்கிறீர்களா?
கடவுளுடன் வழக்கமாக உறவை வைத்திருக்கும் ஒரு தேர்ந்தெடுப்பைத் தெரிந்தே செய்வீர்களா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/