இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 2 நாள்

இன்று நாம் ஆதாம் ஏவாளின் குடும்பத்தில் நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். காயின் கோபத்தின் உச்சத்தில், பொறாமையில்,பாதுகாப்பற்ற தன்மையில் தன் சகோதரன் ஆபேலைக் கொலை செய்துவிட்டார். கடவுளுக்கு எது பிரியமானது என்பதை எப்படியோ ஆபேல் கண்டறிந்திருந்தார்;அதன்படி செயல்பட்டார்என்பது சுவராசியமான செய்தியாகும். ஆனால் காயீனோ தனக்குப் பிரியமானதையே செய்து இறுதியில் கடவுளுக்குப் பிரியமில்லாததைச் செய்தார். அவர் மனம் திருந்தி ஒப்புரவாகியிருக்கலாம் என்றாலும் ஒரு கொடூரமான குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தார். தனிமையாகத் தோட்டத்தில் தன் உடன் பிறந்தவனின் இறந்த உடலுடன் நின்று கொண்டிருந்தார். அதன் பின் அவருக்கும் கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடலானது சோகமானதும் மனதை சஞ்சலப்படுத்துவதுமாக இருந்தது. என்ன நடந்தது என்பது கடவுளுக்குத்தெரிந்திருந்தது,ஆபேலின் தேவையில்லாத மரணம் அவருக்கு துக்கத்தை உருவாக்கியது ஆகவே இது சோகமானது ஆகும். காயீன் இதைக் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருந்ததுவே சஞ்சலமானது ஆகும். இந்த உரையாடல் ஒரு இருளான திசையில் சென்றது. காயீன் இப்போது ஆபேலின் இரத்தத்தைக் குடித்த நிலத்தினால் சபிக்கப்பட்டவராக இருப்பார் என்று கடவுள் சொன்னார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் நாடோடியாகச் சுற்றித் திரிவார் என்றார் கடவுள். ஆனாலும் கடவுள் தனது தாராளமான கிருபையையும் வெளிக்காட்டினார். அவர் உலகத்தில் வாழும் நாட்களில் எல்லாம் யாரும் அவரைக் கொலை செய்யாதபடி கடவுள் அவர் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். மிகவும் மோசமான பாவிகளுக்கும் கூட கடவுளின் கிருபையானது கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. பாவி இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் அதை ஏற்றுக் கொண்டு மீட்கப்படும்போது அது கிடைக்கிறது. (எபேசியர் 2:8)

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
உங்கள் வாழ்வில் கடவுளின் கிருபை இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
மற்றவர்களிடம் இருந்து கிருபையை நீங்கள் எங்கே தடுத்து வைத்திருக்கிறீர்கள்?
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பாவமான குணத்தைக் காட்டும்படி கடவுளிடம் கேட்பீர்களா?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/