இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 5 நாள்

யாக்கோபுவுக்குப் பல பட்டங்கள் உண்டு. ஆபிரகாமின் பேரன்,ஏமாற்றுக்காரன்,குதிகாலைப் பிடிப்பவன்,தந்திரமான வியாபாரிபோன்றவை அவற்றில் சில. இவை எல்லாம் ஒரே இரவில் மாறிப் போயிற்று. அவர் தனியாக இருந்தபோது ஒரு தேவதூதனுடன் அவர் இரவு முழுவதும் போராடவேண்டியதாக இருந்தது. யாக்கோபின் உறுதித்தன்மை தனது மாமா லாபான் மற்றும் அவர் மகன்களுடன் இருந்த வருடங்களில் வளர்ந்திருந்தது. ஆகவே விடியும் வரையும் தனது போராட்டத்தை நிறுத்தவில்லை. இந்த நிலையில் தேவதூதன் விடுபட விரும்பினார். ஆனால் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் நான் விடமாட்டேன் என்றார் யாக்கோபு. எத்தனை உறுதி! தேவதூதனும் அதையே செய்தார். யாக்கோபைத் தன் பெயரைச் சொல்லச் சொன்னார். அதன் மூலம் அவர் யாராக இருந்தார் என்பதையும் கடவுளை சந்தித்தபின்னர் அவர் எப்படிப்பட்டவராக மாறுவார் என்பதையும் அவருக்குச் சொல்லவே இவ்வாறு கேட்டார்.

ஈசாக்கிடம் இருந்து ஓடிப்போன ஒரு மகனாக இருந்து கடவுளுடனும் மனிதனுடனும் போராடி வெற்றி பெற்ற இஸ்ரவேலாக மாறினார். இது பெரும் பாராட்டு மட்டுமல்ல பெரும் தகுதியும் ஆகும். யாக்கோபு கடவுளுடன் போராடி அவரை ஆசீர்வதிக்கச் செய்யும் மேற்கொள்ளும் ஆசை அவரிடம் இருந்ததால் தான் மாற்றம் அடைந்தார். இது தான் உறுதித்தன்மை. இது தான் விடாப்பிடியான விசுவாசம்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
கடவுளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் உங்களிடம் இருக்கின்றனவா?
சந்தேகம் அல்லது பாடுகள் வந்தபோது அவருடன் போராடியிருக்கிறீர்களா?
அவரது ஆசீர்வாதம் உங்கள் வாழ்வில் வேண்டும் என்று தைரியமாக அவரிடம் கேட்டிருக்கிறீர்களா?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/