இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

கிதியோன் ரகசியமாக கோதுமையைத் தன் ஆலையில் போரடித்துக் கொண்டிருந்தபோது கர்த்தருடைய தூதன் என்ன சொல்லி அழைத்தார் என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. அவர் மீதியானியர்களுக்குப் பயந்து போயிருந்தார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர்களது பார்வைக்குத் தெரியாமல் இருந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்து பராக்கிரமசாலியே என்று அழைக்கிறார் தூதன். ஆகா! நாம் நம்மைப் பார்ப்பதைவிட கடவுள் எத்தனை வித்தியாசமாக நம்மைக் காண்கிறார்! “கடவுள் உன்னுடன் இருக்கிறார்" என்று தூதன் சொல்வதும் சுவராசியமானதாக இருக்கிறது. கிதியோன் ஒரு கேள்வியையே பதிலாகக் கொடுக்கிறார், “கர்த்தர் எங்களுடன் இருக்கிறார் என்றால் இவைகள் எல்லாம் எங்களுக்கு ஏன் நடக்கின்றன?” கிதியோன் தனக்காக மட்டுமல்ல தன் மக்களுக்காகவும் கேட்டார். இது தான் தலைமைத்துவத்தின் அடையாளம். அதை அவரிடம் கண்டார் கடவுள். கடவுளின் வார்த்தையை ஒவ்வொரு படியிலும் சோதித்துப் பார்த்தாலும் கூட கடவுள் மிகவும் பொறுமையாக இருந்து ஒவ்வொரு தடவையும் அவருக்குப் பதில் கொடுக்கிறார்.
கிதியோன் படிப்படியாக மீதியானியர்களுக்கு எதிரான போரில் நடத்திச் செல்லப்படுகிறார். அது வழக்கமான போர்த் திட்டமாக இல்லை என்றாலும் அதில் கடவுளின் கரமானது முழுமையாக இருந்தது. போருக்காக வீரர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட கடவுள் தலையிடுகிறார். ஏனென்றால் இஸ்ரவேலர் அதிக தைரியம் அடைந்து மீண்டும் வழிவிலகிப் போய்விடக்கூடாது என்று கடவுள் விரும்பினார். அந்த நாளில் பெரும் வெற்றி போர்க்களத்தில் கிடைத்திருந்தாலும்,கிதியோன் நன்றாக அதை நிறைவு செய்யவில்லை. அவர் இஸ்ரவேலரை உருவ வழிபாட்டுக்கு நடத்தினார். அது அவருடைய குடும்பத்துக்கு கண்ணியாக இருந்தது.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
கடவுள் வெளியே இப்போது எடுக்க விரும்புகிற மறைவான வரங்கள் ஏதாவது எனக்குள் இருக்கின்றனவா?
இன்று கடவுள் உங்களை எதற்காக அழைக்கிறார்?பராக்கிரமசாலியே? அன்புக்குரியவரே? அவரது சத்தத்தைக் கேளுங்கள்.
நான் சரியாக நிறைவு செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேனா?
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
