இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

யோசுவா மோசேயை,அவரது யாத்திராகமக் காலத்து இஸ்ரவேலரின் மீதான தலைமைத்துவ நாட்கள் முழுவதிலும் நெருக்கமாகப் பின்பற்றினார். ஆசரிப்புக்கூடாரத்திற்கு வெளியிலும் மலையடிவாரத்திலும் அவர் தொடர்ச்சியாகக் காத்திருந்தார். இந்த காத்திருப்பு மற்றும் காணும் காலங்கள் தங்களை நடத்திச் சென்ற கடவுளின் மீது ஆழமான மரியாதையை உருவாக்கியிருக்க வேண்டும். மோசேயின் மரணத்துக்குப் பின் கடவுள் யோசுவாவுடன் மட்டுமே பேசி பலம் கொண்டு திடமனதாயிருக்கும்படி சொல்கிறார். ஏனென்றால் அவர் மோசேயுடன் இருந்தது போல யோசுவாவுடனும் இருப்பார் என்று வாக்களித்தார். பெரும் கூட்ட மக்களை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களை அங்கே குடியிருக்க வைக்கும் பெரிய பணியைச் செய்யவிருக்கும் ஒரு புதிய தலைவருக்கு இது எத்தனை உறுதியைக் கொடுத்திருக்கும்! கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் யோசுவா ஒருபோதும் தடுமாற்றம் அடையவே இல்லை. இதுவே அவரை அவரது மக்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது (காலேப்,யப்புன்னே ஆகியவருடன் கூட).
கடவுள் யோசுவாவுக்கு அடிக்கடி கொடுத்துக் கொண்டிருந்த அறிவுரையானது,நியாயப்பிரமாண புத்தகம் அவரை விட்டு விலகக்கூடாது என்பதாகும். இந்தக் கட்டளையே ஒரு பெரும் சுமையானது தான்.ஏனென்றால் கடவுள் மோசேக்கு அதிகமான கட்டளைகளைக் கொடுத்திருந்தார் (பத்துக்கட்டளைகளைத் தவிர). இந்தக் கட்டளைகள்,ஒருவரது வாழ்வில் கடவுளுடனான உறவின் மூலமாக பதிக்கப்பட்டுவிட்டால் அவற்றின்படி வாழ்வது என்பது எளிதானதாகிவிடும். நாம் ஒருவரை நேசிக்கும்போது,அவருக்குப் பிரியமான செயலைச் செய்கிறோம். அது ஒரு வேலையாக நமக்குத் தெரியாது. கடவுளுடனான நம் நடையும் அப்படிப்பட்டது தான். நாம் அவரை நம்மில் இருக்கும் அனைத்தையும் கொண்டு நேசிக்கும்போது,அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியும் போது,அவற்றின்படி வாழும்போது இவை பாரமானவைகளாக இருக்காது.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நான் கடவுளை ஆழமாக அன்பு செய்கிறேனா?
அவரது எழுதப்பட்ட வார்த்தையின்படி நான் வாழுகிறேனா?
என் வாழ்வில் பயம் அதிகம் ஆதிக்கம் செய்யும் பகுதி எதுவும் இருக்கிறதா?கடவுள் என்னுடன் இருப்பதால் நான் பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும் என்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய பகுதி ஏதாவது என் வாழ்வில் இருக்கின்றதா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
