நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 40 நாள்

"நாள் 40: கல்லறை"

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதே கிறிஸ்துவ மார்க்கத்தின் மைய கூறாக இருக்கிறது. வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு தாவ சோதிக்கப்பட்டாலும், சிலுவையிலிருந்து உயிர்த்தெழுதல் தாவ சோதனையாயிருந்தாலும், மத்தேயு கல்லறையின் அமைதி மற்றும் இடைநிறுத்ததை சுட்டிக்காட்டுகிறார்.

அநேகர் கிறிஸ்துவத்தின் நம்பிக்கையை உடைக்க முயன்றிருக்கின்றனர், இயேசு உண்மையாக மறுக்கவில்லை, சீஷர்கள் அவர் சரீரத்தை திருடிவிட்டார்கள், என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மத்தேயு அந்த முடிவான சுவாசம் மற்றும் முதல் தரிசனம் இடையே சொல்லும்போது உண்மையான மரணம், அமைதியான கல்லறை மற்றும் நம்பிக்கையற்ற ஒரு சூழலை குறித்து சொல்கிறார்.

ரோமர்கள் மரண தண்டனையை கடைபிடிக்க மிக தேர்ந்தவர்கள், அதுவும் தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை குறித்து மிக ஜாக்கிரதையாக இருப்பார்கள். யோசேப்பு இயேசுவின் சரீரத்தை பெற்றார் என்றால், நிச்சசயம் ரோமர்கள் மறுத்துவிட்டார் என்று இயேசுவை குறித்து சோதித்து அறிந்தே செய்திருப்பார்கள். பழைய ஏற்பாட்டில் யூதர்கள் குற்றவாளிகள் மீது கல் குவியலை போட்டு வைத்து அவர்களுக்கு நம்பிக்கை இனி இல்லை என்று காட்டுவார்கள். இதேபோல ஒரு பெரிய கல் கல்லறையின் முன் வைக்கப்பட்டிருந்தது என்றால் அதற்கு மேல் நம்பிக்கையில்லை என்று தான் அர்த்தம். கல்லறை அமைதியாக, இருளாக இருந்தது.

இது நம்முடைய முடிவாகவும், மனிதகுலத்தின் விதியாகவும் இருந்திருக்கவேண்டும். ஆனாலும், நமக்கு முன்பு கல்லறைக்கு சென்றவர் மூலமாக, அதனூடாக சென்று தேவனுடைய சிருஷ்டிப்பான புது உலகத்திற்கு செல்ல ஒரு வழி உண்டு என்பதே நம் நம்பிக்கை. ஒருவர் கல்லறையை வென்றதினால், அவரோடு நாமும் புதிய ஜீவனை காணமுடியும் என்பதே நம் நம்பிக்கை. மத்தேயு கல்லறையை அமைதியாக வர்ணித்தாலும், அது ஒரு நாள் மாத்திரம் நிலைத்த அமைதியே.

ஜெபம்

பிதாவே, கல்லறையின் இருள் சீக்கிரத்தில் மூன்றாம் நாளின் வெளிச்சத்தால் வெல்லப்படும் என்று நியாபகமூட்டும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.