நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 37 நாள்

"நாள் 37: சூழ்ச்சி"

இயேசுவின் வாழ்க்கை முடிவின் விளிம்பில் இருந்தபோதும், அவர் அதிக கட்டுப்பாடோடு இருந்தார். அவருடைய கைது, சிலுவையில் அறையப்படும் நிகழ்வு போன்றவற்றை மதபோதகர்கள் சூழ்ச்சி செய்வதற்கு முன்னமே சொன்னார். நம்பப்பட்ட சீஷன், யூதாஸ்காரியோத் தன்னை காட்டிக்கொடுப்பான் என்று அறிந்திருந்தார். யூதாஸ்காரியோத்தின் நாடகத்திற்கு மத்தியிலும் இயேசு உண்மையை அறிந்திருந்தார் என்று அவன் அறிந்திருந்தால் என்ன ஒரு கேவலமாக அவனுக்கு இருந்திருக்கும். மனிதர்கள் தங்கள் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் கொண்டிருந்தாலும், தேவனுடைய திட்டமே நிலைக்கும். அவர் நினைத்ததை தடுக்க எந்த ஒரு சக்தியாலும் கூடாது. இயேசு சிலுவையில் அறையப்பட கொடுக்கப்படுவதை காட்டிலும் தேவனுடைய திட்டத்தில் மையமாக வேறேதும் இல்லை. அவருடைய கடைசி உணவு, பஸ்கா, இயேசுவின் மரணத்தின் திட்டத்தை சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வு. பஸ்கா என்பது எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் யாத்திரையாக வந்ததை நினைவுகூரும் ஒரு பண்டிகை. இயேசுவின் சிலுவை மரணம் புது யாத்திரையை சுட்டிக்காட்டியது - பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. அதன்மூலம் மனிதர்கள் அவருடைய அன்பின் சுயாதீனத்தில் வாழ முடியும்.

வாழ்க்கை குழப்பமாக இருக்கும்போது, அர்த்தம் புரியாதபோது, இயேசுவின் வாழ்வின் முடிவில் இருந்த அனுபவத்தை நினைவுகூருவது அதிக ஆதரவை தரும். மனிதர்கள் அவரை சுற்றிலும் சூழ்ச்சிசெய்து அதில் வென்றாலும், தேவனுடைய திட்டத்தை அவர்களால் கெடுக்க முடியவில்லை. அதிகாரத்தில் இருக்கும் அவரின் திட்டத்தில் யாராலும் தலையிடமுடியாது என்பது எவ்வளவு ஆதரவு. அவருடைய நற்சித்தம் நடக்க எப்போதும் கிரியை செய்கிறார். இயேசுவை நோக்கிப்பார்ப்பதன் மூலம், அதிலும் அவரின் மரணத்தை நினைவுகூரும்போது பாவத்திலிருந்து நாம் யாத்திரையாக செல்லவும் அன்பில் ஜீவிக்க சுயாதீனத்தையும் கொண்டிருப்போம்.

ஜெபம்

கிருபையுள்ள பிதாவே, எங்கள் ஜீவியங்களில் அதிகாரத்தை கொண்டிருப்பதர்காக நன்றி, முக்கியமாக நாங்கள் குழப்பத்திலிருக்கும்போது. எங்கள் ஜீவியத்தில் மையத்தில் அதிகாரம் கொண்டவர் மீது எங்கள் கவனத்தை திருப்பும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவில் விசுவாசித்து, பாவமன்னிப்பை உணர்ந்து, அன்பின் விடுதலையில் ஜீவிக்க உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.