நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 38: கழுவுதல்"
முதல் வசனம் இவ்வாறாக மொழிபெயர்க்க பட்டிருக்கின்றது "உலகத்திலிருந்து தன் சொந்த ஜனத்தை சிநேகித்து, இப்போது அவருடைய முழு அன்பையும் வெளிக்காட்டினார்". இந்த கால்களை கழுவும் எதிர்பாராத செயலால், இயேசு திவ்விய அன்பின் சுபாவத்தை குறித்து ஒரு முக்கிய பாடத்தை காட்டுகிறார். அன்பு இயேசு செய்வது மாத்திரம் அல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார்.
அநேக வேளையில், நாம் ஒருவரை நேசிக்க நினைக்கும்போது, நாம் செயல்கள், கிரியைகள் என்பதாக அதை யோசிக்கிறோம். நாம் நம்மையே, அன்பாய் செய்யக்கூடிய காரியம் என்ன? என கேட்டுக்கொள்கிறோம். அண்ணல் இயேசுவின் எதிர்பாராத, தன்னையே ஒன்றுமில்லாமல் செய்த கால்களை கழுவும் செயல் இந்த கேள்வியை கேட்க தூண்டுகிறது, "நான் யார்?". இந்த கேள்வியை முதலாவது கேட்காமல், நாம் சுவிசேஷ அன்பை காட்டாமல் நாமே நம் அன்பிற்கு அளவுகளை வைத்துவிடுவோம். உதாரணத்திற்கு, நாம் அநாதை பிள்ளைகள், நாமே நமக்கு உதவி தேடிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து, நாம் தேவனுடைய பிரியமான பிள்ளைகள் என்று மறந்துபோனால் நமக்கு பத்தாமல் போய்விடும் என்று அஞ்சி மற்றவர்களுக்கு உதவாமல் போவோம். இதேபோல நாம் நம்முடைய சொந்த கடும் முயற்சியினால் நீதிமான்கள் என்று யோசித்தால், மற்றவர்கள் 'தகுதியற்றவர்கள் ' என்று எண்ணி மற்றவர்களுக்கு உதவ மாட்டோம்.
நாம் கிறிஸ்துவை நோக்கி பார்க்கும்போது, மற்றவர்களுக்கு சேவைசெய்ய ஒரு அழகான சுயாதீனத்தை உணருவோம், அவருடைய பாதுகாப்பை உணருவதனால். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." (பிலிபியர் 2:6-7). இயேசு பிதாவின் அன்பை அறிந்தபடியால் யாரும் எதிர்பாராதவண்ணம் அவரால் சேவிக்க முடிந்தது. சீஷர்களின் கால்களை கழுவின அதே அன்பு அவரை சிலுவைக்கும் நடத்தியது. கிறிஸ்துவினால் நாமும் பிதாவோடு நல்ல அந்தஸதையும் பாதுகாப்பையும் கொண்டு, அவரைப்போல சேவிக்கக்கூடும்.
ஜெபம்
பரம பிதாவே, நான் கிறிஸ்துவில் யாரென்றும் என்னை சுற்றிலும் இருக்கும் கிருபையையும் ஒவ்வொரு நாளும் மறக்கிறேன். நீர் என்னவாக உருவாக்கியிருக்கிறீர் என்றும் உம்முடைய சத்தியத்தையும் மறந்ததினால் என் அன்பு குறைந்திருக்கிறது. இந்த குறைவுகளை நீர் நீக்கும், அதன்மூலம் மற்றவர்களுக்கு சேவைசெய்ய எனக்கு உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.