நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

“நாள் 1: தூசி”
நாம் ஆதியாகமம் 3-இற்கு வரும்போது, நாம் சபிக்கும் ஒரு தேவனை சந்திக்கிறோம்! அவர் ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமைக்கும் சர்ப்பத்தின் துரோகத்திற்கும் நிச்சயமான தண்டனையை தருகிறார். ஒவ்வொரு சாபம், நியாயத்தீர்ப்போடும் தேவனுடைய அழகான சிருஷ்டிப்பின் கிரியை மாற்றப்படுவதை காண்கிறோம். தூசியிலிருந்து சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம் அதற்கே திரும்பவேண்டியதாயிற்று. ஆதாமிலிருந்து சிருஷ்டிக்கப்பட்ட ஏவாள் அவனால் ஆதிக்கம் செலுத்தப்படவிருந்தால். மற்ற விலங்கினங்கள் எல்லாவற்றிலும் தந்திரமான சர்ப்பம் இப்போது வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்னும் நிலைக்கு கேவலப்படுத்தப்பட்டது. இந்த அதிகாரத்தில் பாவம் சிருஷ்டிப்பை பாதித்ததை காண்கிறோம்.
இந்த வேதப்பகுதி நாம் பாவத்தை கண்டும் காணாமல் விடும் தன்மையை சுட்டிகாட்டுகிறது. பாவத்தின்மூலம் மரணம் இந்த உலகத்திற்குள்ளாக வந்தது, அதோடுகூட துக்கம், வேதனை மற்றும் விரக்தியும் வந்தது. ஆனால் இந்த பாவத்தின் சாபம் அநேக நூற்றாண்டுகள் பிறகு வேறொரு மனிதனின் மீது சுமத்தப்பட்டது. பவுல் கலாத்தியர் 3:13-இல் சொல்வதுபோல் "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." இயேசு மனிதகுலத்தின் இந்த நிலையை மற்ற அவர்மீது சாபம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.
ஜெபம்
அன்புள்ள பிதாவே, நீர் பரிசுத்த தேவன் என்றும் நியாயத்தை விரும்புகிறவர் என்றும் பாவத்தை லேசாக எண்ணாதவர் என்றும் துன்மார்க்கம் தண்டிக்கப்படாமல் விடாதவர் என்றும் அறிவேன். ஆனால் உம்முடைய குமாரன் இயேசுவின் மீது என் சாபங்களை அனுமத்தித்த உம்முடைய திட்டத்தை நடத்த ஞானம், இரக்கத்திற்காக நன்றி சொல்கிறேன். கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.