நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 34: கணிப்பு"
யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் அதிக பகுதியை இயேசுவின் கடைசி ஆறு நாட்களை குறித்து பேசுவதில் உபயோகித்திருக்கிறார். யோவான் 12-இல் இயேசு அவர் மரிக்கவிருந்த முறையை கணிக்கிறார் - சாத்தான் இந்த உலகத்தின்மீது கொண்டிருக்கும் பிடிப்பை உடைக்கும் ஒரு மரணம், இயேசுவை மரணத்திலிருந்தும் சிலுவையிலிருந்தும் எழுப்பி அவர் பக்கம் உலகத்தின் மக்கள் அனைவரையும் கொண்டுவரும் ஒரு மரணம் (வசனம் 32). ஆனால் இதில் அவரை பின்பற்றி சீஷர்கள் என்று அழைக்கப்படும் நபர்களுக்கு வகுக்கப்பட்ட கோட்பாடுகளை அவரை சொல்கிறார்.
யோவான் சுவிசேஷத்தில் இயேசுவின் ஆரம்ப ஊழிய நாட்களிலிருந்து அவர் இந்த 'சமயம்' என்று குறிப்பிடுகிறார் - உலகத்தின் பாவங்களுக்காக அவர் பாடு அனுபவிக்க குறிக்கப்பட்ட வேளை/சமயம். ஆனால் இந்த தாழ்மையின் மத்தியில் இயேசு தேவனுடைய மகிமையை வெளிக்காட்டுகிறார். தேவன் கிறிஸ்துவின் பூமியின் ஊழியத்தில் மாத்திரம் அல்ல அவருடைய மரணத்திலும் மகிமை அடைகிறார். யோவான் இதை முன்னமே உரைக்கிறார் (யோவான் 1:14).
இங்கு மனித நேயமான இயேசுவை காண்கிறோம், அவர் உண்மையை ஒப்புக்கொள்கிறார் "இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது," (வசனம் 27). அவர் படவிருக்கும் பாடுகளை நினைவுகூர்ந்து. தேவனுடைய மகிமை மாத்திரமே முக்கியம் என்று கருதி அளவில்லா பாடுகளை அனுபவிக்க ஒப்புக்கொண்ட இந்த காட்சி மிக அற்புதமானது. இது சீஷர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.
விதைகள் உயிருள்ளவைகள், அவைகள் மரித்து புது சிருஷ்டியாக உருவாக வேண்டும்; அவைகள் வரும்கால ஜீவனை வாக்காக கொண்டிருக்கின்றன. மேலோட்டமாக, கிறிஸ்துவின் மரணம் இந்த உலகிற்கு ஒரு அழிவைபோல தோன்றலாம். ஆனால் பூமியில் விழுந்து (வசனம் 24) அவர் அநேக ஊழியர்களை எழுப்பி அநேகரை தேவ குமாரர்களாக ஆக்குகிறார் (எபிரேயர் 2:10). ஆனாலும் கிறிஸ்துவை பின்பற்றுவது ஒரு விளைகிரயத்தோடு வருகிறது. அநேக சீஷர்கள் வலிநிறைந்த மரணங்களை சந்திக்க வேண்டியிருந்தது, தேர்டுல்லியன் என்பவர் சொல்லத்தக்கதாக "இரத்தசாட்சிகளின் இரத்தமே சபையின் விதை" என்று. கிறிஸ்துவின் சீஷர்கள் எப்போதும் "மரித்து" கிறிஸ்துவில் "உண்மையான நம்பிக்கையை" பெறவேண்டும் (1 பேதுரு 1:3-5). டயாட்ரிக் பாணஹாபர் சொன்னது போல "கிறிஸ்து ஒரு மனிதனை அழைக்கும்போது, அவன் வந்து மரிக்கும்படியாக அழைக்கிறார்".
ஜெபம்
உயிர்த்தெழுந்த தேவனே, எங்களை பாவத்திலிருந்து இரட்சித்து அவ்வளவாக எங்களை நேசித்தீர். இந்த உண்மை எங்களுக்கு தாழ்மையை கற்றுக்கொடுக்க, உம்மை துதிக்க, உம்முடைய சித்தத்திற்கு எங்களை ஒப்படைக்க உதவும். உம்முடைய இரக்கத்தில் இதை செய்தருளும். ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.