நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 35: அபிஷேகம்"
"என்ன ஒரு வீணான செலவு!" இதுதான் இயேசுவை அபிஷேகிக்க விலையேறப்பெற்ற தைலத்தை உபயோகித்த ஸ்திரீயை குறித்து சொல்லப்பட்டது. இயேசு அதை ஏற்கவில்லை. நம்முடைய செயல்கள் எவ்வளவு விலையேறப்பெற்றதாக இருந்தாலும் அது போதாது என்று அறிந்திருந்தார். இந்த பரிமள தைலத்தை விற்று அந்த விலையை உபயோகித்திருந்திருக்கலாம் என்று பலர் சொன்னாலும், இயேசு அவளது செயலை சரியாக உணர்ந்தார். ஏன்? ஏனென்றால் அது ஒரு ஆராதனையின் செயல். நாம் எதை ஆராதிக்கிறாமோ அதில் தான் நம் ஜீவன் உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
தவறானவைகளை நாம் ஆராதித்தால் எதுவும் சரியாக நடக்காது. ஆனால் நமக்காக இயேசுவையே தியாகபலியாக ஒப்புக்கொடுத்த ஜீவனுள்ள தேவனை ஆராதி, அப்போது உனக்கு எது தேவை என்று அறிந்து உன் ஜீவியத்தை சரியாக வகுக்க அவர் உதவுவார். திடீரென உன் ஜீவியத்தை இயேசுவுக்காக "வீணடிக்க" கொடுப்பது போலவும், உனக்கென ஒரு திட்டத்தை கொள்ளாமல் வாழ்வது போலவும் உணரலாம்.
இதில் தரித்திரர்களுக்கு உதவுதலும் அடங்கும்.
தவறாக அநேகர் புரிந்து கொண்டாலும், இயேசு இந்த பகுதியில் நாம் தரித்திரருக்கு கொண்டிருக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கவில்லை. அவர் உபாகமம் 15-ஐ சுட்டிக்காட்டுகிறார், அது தரித்திரருக்கு உதவ கற்றுக்கொடுக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட கொடுக்கும்தன்மை தேவனை ஆராதிப்பதன் மூலம் தான் வரும். முதலாவது தேவனை வை, அவரே ஆராதனைக்கு பாத்திரர் என்று கருது, அப்போது உலகத்திற்கு சேவை செய்ய உன்னை ஊற்றுவதை நீ காண்பாய்.
ஜெபம்
தேவனே, அநேக வேளை நான் தவறான காரியங்களை ஆராதிக்கிறேன். என் ஜீவியம் உம்மில் "வீணடிக்கப்பட வேண்டியது" என்று அறிந்து உலகத்தில் அழகான காரியத்தை செய்ய உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.