நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 3 நாள்

"நாள் 3: இருள்”

ஆதியாகமம் 15 ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த மிக சிறந்த சம்பவத்தை காட்சிப்படுத்துகிறது.

நாடோடியான அவருக்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசம் என்ற வாக்கு அவருக்கு அமைதியையும் நம்புவதற்கு கடினமாகவும் இருந்திருக்கும். ஆகவே ஆபிரகாம் வசனம் 7 (பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.)-இல் தேவன் இவ்வாறு சொன்னதற்கு வசனம் 8 (அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.)-இல் சொல்வது போல பிரதிகிரியை செய்வது இயற்கையே. அவருடைய கோரிக்கையைவிட தேவன் காண்பித்த அடையாளமே ஆச்சரியமாக இருந்தது.

விலங்குகள் தேவனுக்கு முன்பாக பலியிடப்படுகின்றன, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான். சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணினார். (வசனம் 12-18).

இங்கு என்ன நடைபெற்றது? பண்டைய கிழக்கு பிராந்தியத்தில், இரண்டுபேர் உடன்படிக்கை செய்தால், அப்போது ஒரு பலியிட்டோ அல்லது ஒரு தண்டனையின் நிகழ்வை நடத்தியோ அந்த உடன்படிக்கையை கைக்கொள்ளாமல் போனால் வரும் தண்டனையை விளக்குவார்கள். இதன்மூலம் இரண்டுபேரும் அவர்களுடைய ஜீவனைக்கொடுத்தாவது அந்த உடன்படிக்கையை கைக்கொள்வார்கள் என்று ஒப்புக்கொள்வார்கள். இல்லையென்றால் அவர்களுடைய முடிவும் இந்த பலியிடப்பட்ட விலங்குகள்போல இருக்கும் என்று உணர்ந்தார்கள். இந்த இருளில் ஆபிரகாம் தேவனை காண்கிறார் (புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின).

சுவிஷேஷகர்கள் இயேசு மறுத்தபோது பூமியெங்கும் இருள் சூழ்ந்தது என்று விவரிக்கிறார்கள். அந்த சனத்தில் தேவன் அவருடைய வாக்குகளை நிறைவேற்ற செய்த அந்த பலியை பார்க்கிறோம். நாம் பரத்திற்கு செல்ல அவர் கல்லறைக்கு சென்றார், நமக்கு வாசஸ்தலம் தர அவர் நாடோடியானார், நமக்கு வெளிச்க்கம் தர இருளை அவர் சகித்தார் என்பதற்கு அது ஒரு நினைவாக இருக்கிறது. சொல்லப்போனால், இந்த தரிசனம்தான் ஆபிரகாமின் பயத்தை ஆதியாகமம் 15:1-இல் அமைதிப்படுத்தியது (ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும்".) இது உன்னுடைய ஆறுதலாகவும் இருக்கிறதா?


ஜெபம்

பிதாவே, இயேசு இருளை அனுபவித்ததினால், எனக்கு வெளிச்சம் உண்டாகியிருக்கிறது என்றும்; அவர் நாடோடியாக இருந்ததினால் எனக்கு வாசஸ்தலம் வாக்களிக்கப்பட்டிருக்கிறதென்றும்; அவர் கல்லறையை அனுபவித்ததினால் எனக்கு பரலோகம் வாக்களிக்கப்பட்டிருக்கிறதென்றும் நினைவூட்டும். நான் பயப்படாமல், நீரே என் கேடகமும் எனக்கு பெலனுமாக இருக்கிறீர் என்று எனக்கு உதவும். கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.