நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 4 நாள்

"நாள் 4: பரிட்ச்சை"

இது மிக அறியப்படுகிற கடினமான வேத பகுதி. ஆபிரகாம் ஆதியாகமம் 12-இல் "அவர்மூலம் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் " என்பதாக அறிமுகப்படுத்தப்படுகிறார் (வசனம் 1-3). ஆகவே மேலே காணப்படும் காட்சியில் தேவன் ஆபிரகாமை தன் வீட்டைவிட்டு அழைத்த தேவனின் அழைப்பு ஒரு முடிவின் கட்டத்திற்கு வருவதை பார்க்கிறோம். தேவன் இப்போது அந்த அழைப்பில் ஆபிரகாமின் மிக கடினமான பரிட்ச்சையையும் தியாகத்தையும் சேர்த்திருக்கிறார் - அவருடைய ஒரே குமாரனை பலியிட சித்தமாயிருப்பது. இந்த நிகழ்வின் வலியும் வேதனையும் ஆபிரகாமும் சாராலும் அநேக ஆண்டுகள் தேவன் தந்த குழந்தைக்காக காத்திருந்தனர் என்று அறியும்போது அதிகரிக்கிறது.

இப்போது அவர்களுடைய ஜெபங்களுக்கு செவிகொடுத்து ஒரு மகனை தந்தபிறகு, தேவன் மிக கொடூரமான முட்டாள்தனமான ஒரு வேலையை செய்ய சொல்கிறார். ஆபிரகாமின் ஒரே குமரனின் பலியை கொண்டு தேவன் எப்படி ஜனங்களை உண்டாக்க போகிறார்? இந்த மரணம் எவ்வாறு ஆதியாகமம் 12-இல் உள்ள ஆசீர்வாதங்களை கொடுக்கும்? ஆபிரகாமின் ஜீவியத்தைவிட்டு இயேசுவின் ஜீவியத்தை நாம் நோக்கிப் பார்க்கும்போது இதற்கு பதில் கிடைக்கும்.

இந்த பரிசுத்த வாரத்தில், இந்த சூழலின் நினைவோடு இந்த விசுவாசம் மற்றும் பலியின் காரியத்தை காணும்போது, இந்த நிகழ்வு எவ்வாறு இயேசுவின் விசுவாசம் மற்றும் பலியை ஒப்பிடுகிறது என்று பாருங்கள். தேவனே பலிக்கான ஆட்டை தருவார் என்று ஆபிரகாமின் பிரகடனம் (ஆதியாகமம் 22:8) நமக்கு இந்த உலகத்தை இரட்சிக்க தேவனின் ஆட்டுக்குட்டியான ஈவை நியாபகமூட்டுகிறது (மாற்கு 10:45; யோவான் 1:29, 36). மோரியா மலையில் தேவனுடைய ஈவு அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவூட்டுகிறது - சிலுவையில் நம்முடைய இடத்தை ஏற்றுக்கொண்ட உண்மையான ஆட்டுக்குட்டி. ஈசாக்கைபோல, பலிக்காக நடத்திச்செல்லப்பட்ட ஆட்டுகுட்டிதான் கிறிஸ்து.ஆனாலும் ஈசாக்கு-க்கு மாறாக, இயேசு தன் வாயை திறக்கவில்லை. ஈசாக்கு பலிக்கான விறகை சுமந்துசென்றது போல, கிறிஸ்துவும் தன் சொந்த மர சிலுவையை சுமந்துசென்றார் (யோவான் 19:17). திரும்ப சென்று இயேசுவின்மீது கண்களை பதித்து இந்த வேதாகம பகுதியை வாசித்துப்பாருங்கள், அவரே நம்முடைய விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாக இருக்கிறார் (எபிரேயர் 12:2).

ஜெபம்

பரிசுத்த பிதாவே, இந்த உலகத்திற்குள்ளாக உம்முடைய ஒரேபேரான குமாரனை அனுப்பினத்திற்காக உம்மை துதித்து நன்றிசெலுத்துகிறேன். இயேசுவின் அழகையும் பரிபூரணத்தையும் காணும் கண்களை எனக்கு தாரும். அவரே கரைதிரையில்லா ஆட்டுக்குட்டி. நான் மன்னிப்பையும் புதிய ஜீவனையும் பெற்றுக்கொள்ள தானாக முன்வந்து பலியானவர். உம்முடைய கிருபையினால், நான் விசுவாசத்தில் வாழவும், உம்முடைய நன்மையில் நம்பிக்கைவைத்து மற்றவர்களுக்காக என் ஜீவனை சமர்ப்பிக்கவும் உதவும். கிறிஸ்த்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.