நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 6: பஸ்கா பண்டிகை"
எகிப்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனம் வெளியே புறப்பட்டு வந்தபோது கொண்டாடின பஸ்கா பண்டிகை பழைய ஏற்ப்பாட்டின் முக்கிய அம்சமாக இருக்கிறது. அது தேவ ஜனத்தொடு நிச்சயமாக பேசும்படியாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் தேவன் நம்மோடிருந்தாலொழிய நாமும் மற்றவர்கள் போல தான் இருக்கிறோம் என்று காட்டுகிறது; தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கும் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் தகுதியானவர்கள் என்று. அது மனிதர்களாகிய நமக்கு உரிய ஒரு அடையாளம். அது இல்லாதபடி நாம் தேவனுக்கு முன்பும் மற்றவர்கள் முன்பும் தாழ்மையாக நடக்க மாட்டோம்.
மற்றொரு பக்கத்தில், தேவன் நம்மிடம் தேடுகிற முக்கியமானது விசுவாசம் என்று நியாபகமூட்டுகிறது. அவர் இரக்கம் உள்ளவர் என்றும் நமக்காக கருசினை உள்ளவர் என்றும் விசுவாசிக்க சொல்கிறது. நம்மை குற்றம் சாட்ட அல்ல நம்மை இரட்சிக்கவே அவர் விரும்புகிறார் என்று நாம் விசுவாசிக்க அவர் விரும்புகிறார். அதற்காகவே அவர் இயேசு என்ற மனிதனாக அவதரித்தார். அவர் நாம் அவர் மீது வைக்கும் விசுவாசத்தினால் நம் ஜீவியத்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார் - அது நம் வாசல்களில் இரத்தத்தை தெளிப்பதாக இருந்தாலும், பஸ்கா உணவை இஸ்ரவேலர்கள் போல உண்ணுவதாக இருந்தாலும், தேவனுடைய நற்கருணை விருந்தில் பங்கேற்க்கும்போது இயேசுவின் மரணத்தை நினைவுகூருவதாக இருந்தாலும். உன்னுடைய ஜீவியம் இவ்விதமான தாழ்மையிலும் விசுவாசத்திலும் நடத்தப் படுகிறதா? இல்லையென்றால், ஏன்?
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய இரக்கத்தின் தேவையை நான் விளங்கிக்கொள்ள உதவும். என்னுடைய ஜீவியத்தில் கீழ்ப்படிதல் நிறைந்த விசுவாசம் விளங்க உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.