நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 2: வானவில்”
லெந்து நாட்கள் மனிதனுடைய நிலையை நினைத்துப் பார்க்கும் ஒரு திவ்விய வேலையாக இருந்துவந்திருக்கிறது. சாம்பல் புதன் அன்று மனித வாழ்வு நிலையற்றது என்று நமக்கு நினைவூட்டி - மண்ணிலிருந்து எடுக்கப்பட்டோம் மண்ணிற்கே திரும்புவோம் என்று சொல்லி தந்துள்ளது. அனால் அதனோடுகூட மணித வாழ்வு நிலையற்றது மட்டும் அல்லாமல், சீரழிவுக்கு ஏதுவானதும்கூட என்று நாம் அறிகிறோம். நோவாவின் காலத்தில், மனித சீரழிவு மற்றும் வன்முறை அவ்வளவு மோசமாக இருந்தது, தேவனே இருதயத்தில் காயப்பட்டார் என்று பார்க்கிறோம். மனிதனின் சிருஷ்டிப்பை எல்லாம் வல்ல தேவன் வருத்தப்பட்டார் என்று காணும்போது பாவத்தின் தன்மையை நமக்கு அதிக உணர்வோடு நமக்கு வெளிப்படுத்துகிறது.
வேதாகமம் மனிதனுடைய இருதயத்தை குறித்து புரியாதவண்ணம் பேசாமல், தெளிவாக பேசுகிறது, அதனுடைய பாவ தன்மை, நான் வாழ்ந்த வருத்தம் அளிக்கும் பாவ வாழ்வை குறித்து.
ஆனாலும், இந்த சோகத்தின் மத்தியிலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் புயலின் மத்தியிலும், ஒரு நம்பிக்கை ஒளி வீசுவதை பார்க்கிறோம். நோவா அந்த புயலின் மத்தியில் புயலும் சூரியனும் சந்திக்கும் இடத்தில் பிரகாசிக்கும் வானவில்லை காண்கிறார். அந்த மேகங்களின் மத்தியில் தேவனுடைய கோபம் அவருடைய சமாதானத்தால் நிரப்பும் வான்வில்லினால் நிரப்புவதை காண்கிறார்.
அந்த வாக்கு என்னவென்றால், நம்முடைய பாவம் எவ்வளவு இருளாக வளர்ந்தாலும், தேவன் ஒருபோதும் இனி அவருடைய முகத்தை நம்மை விட்டு திருப்பமாட்டார். அதற்கு மாறாக, தேவன் அவருடைய வானவில்லை மேலாக உயர்த்தி, பரத்திற்கு நேராக உயர்த்தி, அவருடைய அன்பின் சூரியனும் அவருடைய கோபத்தின் நியாயத்தீர்ப்பும் ஒன்றாக சேரும் இடத்தில், இயேசு அந்த இருளில் மறித்து, அதன்மூலம் தேவனுடைய இரட்சிக்கும் திட்டத்தின் மகிமையின் பிரகாசம் நம்முடைய இருதயத்தில் வந்து நிரப்ப செய்வார். இவையனைத்தும் அவர் வருத்தமில்லாமல் செய்வார்.
ஜெபம்
தேவனே, எங்கள் பாவத்தில் உம்முடைய துக்கம் வருத்தம் இவைகளை உணர செய்யும். இந்த நாட்களின் பொது, உண்மையாக எங்கள் பாவத்தின் இருளையும் அதன்மூலம் உம் மகிமையான வாக்கின் பிரகாசத்தையும் நோக்கிப்பார்க்க செய்யும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.