நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 9 நாள்

"நாள் 9: வாசஸ்தலம்"

தாவீது ராஜா முடிவில் கேதுரு மர வீட்டில் அமர்ந்திருக்கும்போது தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டிக்காக ஒரு வாசஸ்தலத்தை விரும்பினார். ஆனாலும், தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, தாவீது அந்த ஆலயத்தை கட்டாதபடி சொல்லி, தேவன் தாவீதின் வீட்டை நிலைக்க செய்வார் என்றும், "நித்தியமாக சிங்காசனத்தில் உட்காரும்" ஒருவர் என்று சொல்லி முடிகிறது.

நிச்சயமாக தேவன் தாவீதின் சந்ததி அவருக்கு முன்பாக ஒரு நினைவாக என்றென்றைக்கும் இருக்கும் என்று சொல்லவில்லை - நாம் நம்முடைய சந்ததியில் மாத்திரமே நிலைக்க முடியும் என்ற வழக்கமான நம்பிக்கைக்கு மாறாக. தாவீதின் சந்ததியில் அவருடைய சொந்த குமாரனை எழுப்புவேன் என்று வாக்குக்கொடுக்கிறார், நம்முடைய அடிகளையும் பாவங்களையும் தீர்க்க.

இது எவ்வளவு தெய்வத்துவம் நிறைந்ததாக இருக்கிறது! நாம் அவரை குணப்படுத்த ஒரு பெறிய திட்டத்தை முன்வைக்கிறோம், அவர் அதை முற்றிலும் வேறான திட்டத்தை வைத்து எதிர்க்கிறார், அதில் அவர் ராஜாவாகவும் மாற்று நபராகவும் மாறுகிறார்.

நம்முடைய திட்டங்களையும் ஜெபங்களையும் தேவன் நல்லவேளையாக திருத்தி சரிசெய்கிறார். ஜேபி, ஜேபி, ஜெபித்துக்கொண்டே இரு, உன் தரிசனம் விசுவாசம் எல்லை வரை. அதற்கு பிற்பாடு தேவன் அதைக்காட்டிலும் சிறந்ததை செய்ய தயாராக இரு.


ஜெபம்

ஓ தேவனே, நீர் வல்லமையுள்ளவர் உண்மையுள்ளவர். உம்முடைய நீதி, நியாயம், நிலையான அன்பு, உண்மைத்தன்மை எங்களுக்கு முன்பாக செல்லட்டும். உம்முடைய முகத்தின் பிரகாசத்தின் முன்பு நடந்து உம்முடைய நாமத்தில் களிகூர உதவும். தாவீதோடு உம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர உதவும், எவ்வாறு சிலுவையினால் என்றென்றைக்கும் உம்முடைய சந்ததியை மரத்தினால் கட்டினீர் என்று. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.