நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 7 நாள்

"நாள் 7: ஜெபம்"

பத்து வசனங்களில் இரண்டு நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது அந்நாள், மலடியான ஒரு ஸ்திரி, ஒரு குழந்தையை பெற்று ஜீவியத்தை அனுபவிக்க விரும்பி தேவனுடைய இரக்கத்தினால் இரட்சிக்கப்பட்டால். இரண்டாவது, ஒவ்வொரு வருடமும் பயணம் செய்து சென்ற தேவனுடைய மக்கள் "சீலோவிலே ஆராதிக்கவும் பலியிடவும் சென்றார்கள்". இந்த இரண்டு நிகழ்வுகள் 1 சாமுவேல் 1-இல் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் நடுவில் நாம் அறிந்திருக்கிற "அந்நாளின் ஜெபத்தை" காண்கிறோம்.

பண்டைய காலத்தில் ஒரு மலடியான ஸ்திரீயை காட்டிலும் உடைந்த ஒரு உள்ளத்தை காணமுடியாது. இஸ்ரவேலில் ஒரு சந்ததியை உருவாக்கவேண்டிய அழுத்தம், மலடியான நிலையை சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய சமுதாயரீதியிலும் கீழாக பார்க்க வைத்தது. அநேக ஆண்டுகள் இதை சகித்த அந்நாள், அவளுடைய கஷ்டம் பாவமாக மாறினதும், அவள் அழுகை துன்பமாக மாறியதையும் உணர்ந்தாள் (1 சாமுவேல் 1:11). ஆகவே சீலோவில், அவளை அடிமைப்படுத்தினத்தை தேவனுக்கு முன்பாக பலியிட்டால். மனந்திரும்பி, ஒரு பொருத்தனை செய்தால் - ஒரு குழந்தையை பெற்றால், அவனை தேவனுக்கென்று ஒப்புக்கொடுப்பால் என்றும், அவளை நிந்தித்தவர்களுக்கு ஒரு அடையாளமாக அந்த குழந்தையை உபயோகிக்கமாட்டாள் என்றும். அவள் சீக்கிரத்தில் கர்ப்பம் தரித்து ஒரு குமாரனோடு திரும்ப வந்தால், ஆசாரியனான ஏலியினிடம் அவனை ஒப்படைத்தால். அந்த குமாரன் தான் சாமுவேல், பழைய ஏற்பாட்டின் முதல் தீர்க்கதரிசி.

ஏதாவது பெற்றோர் குழந்தையை மிக விலையேறப்பெற்றதாக நினைத்திருக்க வேண்டுமென்றால் அது அந்நாள் தான். ஆனாலும், அவனுடைய ஜீவியத்தில் அவளுடைய பங்கு மிக குறைவு என்று அவள் அறிந்திருக்க வேண்டும். அந்நாள் தேவனில் களிகூர்ந்து பெலனை பெற்றால் என்று பார்க்கிறோம் (வசனம் 1). அவள் இந்த உலகில் நிலைத்து இருக்கக்கூடிய ஒரே ஒரு காரியத்தினால் ஆறுதலடைந்தால் என்று பார்க்கிறோம் (வசனம் 2). அந்நாள் எல்லா சரீர அல்லது ஆவிக்குரிய பிரச்னைக்கு பின்பாகவும் அவளுடைய கிரியை அல்ல, தேவனுடைய கிரியை உள்ளது என்று அறிந்திருந்தால் (வசனம் 6-8). அந்த அறிவில் அவள் களிகூர்ந்து விடுதலை பெற்றால்.

ஜெபம்

பரலோக பிதாவே, அந்நாள் விரும்பினதையே நாங்களும் விரும்பாமல் போனாலும், நாங்களும் நிலையில்லா காரியங்களுக்கு நித்திய முக்கியத்தை கொடுத்து கஷ்டப்படுகிறோம். எங்கள் தவறை உணர்ந்து, எங்கள் பாவத்திற்கு மனந்திரும்பி எங்கள் பெலனை கற்பாறையான உம் குமாரனாகிய இயேசுவில் வைக்க எங்களுக்கு உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.