நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 5: சிங்கம்"
தன் மரணப்படுக்கையில், யாக்கோபு தன்னுடைய பன்னிரண்டு குமாரர்களின் வருங்காலம் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்தார், அவர்களுடைய வளர்ச்சியோ தளர்ச்சியோ எதுவானாலும். சிலருக்கு, வருங்காலம் கொடூரமானதாகவும் வலியை தரக்கூடியதாகவும் இருக்கும். மற்றவர்களுக்கோ, தலைமைத்துவமும் ஜெயமும் தரக்கூடியதாக இருந்தது.
யாக்கோபின் நான்காவது குமாரன் யூதாவை குறித்து சொல்லும்போது, அவனுக்கு
தனித்துவமான வருங்காலம் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது. அவனுடைய சகோதரர்களால் மரியாதையாக காணப்படுவான் (வசனம் 8), மற்ற தேசங்களிலிருந்து பாராட்டு வரும் (வசனம் 10) மற்றும் அதிக செல்வமும் வரும் என்று சொல்லப்பட்டது. அவனுடைய ஆட்சி நிலைத்து நிற்கும் என்றும் சொல்லப்பட்டது (வசனம் 10). திராட்ச பழங்கள் அதிக பராமரிப்பை தேவையாக கொண்டிருக்கின்றன என்பதினால், திராட்சரசம் நாடோடிகளுக்கு அதிக விலைமதிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆனாலும் யூதாவின் ராஜ்ஜியத்தில் அதிக திராட்ச செடி இருக்கும், அவனுடைய துணிகளை அதில் கழுவுவான் என்பதாக சொல்லப்பட்டது (வசனம் 11-12). யூதாவின் ஆட்சி மகிமை நிறைந்ததாக இருக்கும், யூதா சிங்கமென அழைக்கப்படுவான் (வசனம் 9).
வெளிப்படுத்துதல் 5-இல், யோவான் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கத்தை தரிசித்தார், ஆனாலும் இந்த தரிசனம் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினால் ஒன்றிணைந்திருக்கிறது. ஏன்? சுவிசேஷங்கள் நமக்கு காட்டுகின்றன, இயேசு பெலவீனத்தில்தான் தன் வல்லமையை காட்டுகிறார், ஊழியத்தின்மூலம் தன் கர்த்தத்துவம், சுய-தியானத்தினால் தன் மாட்ச்சிமையான ஆட்சியை காட்டுகிறவராக இருக்கிறார். வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால், இயேசு சிங்கமாக இருந்ததால் கொல்லப்பட்டார், ஆட்டுக்குட்டியானபடியினால் சிங்காசனத்தனத்தில் அமர்த்தப்பட்டார். உன்னுடைய உடைக்கப்பட்ட வேளையில், வலி மற்றும் கஷ்டத்தின் வேளையில், நீ உன் ஜீவியத்தின்மீது அவர்கொண்டிருக்கும் ஆளுகையின் அபரிவிதத்தை உணர கிறிஸ்து உடைக்கப்படவேண்டியதாக இருந்தது என்று உணருகிறாயா?
ஜெபம்
தேவனாகிய இயேசுவே, நீர் வல்லமையை வெளிக்காட்டி ஆளுகை செய்யாமல், ஊழியத்தின்மூலம் ஆளுகை செய்கிறீர் என்று காணும்போது ஆச்சரியப்படுகிறோம்; மகிமைப்படுத்துவதன் மூலம் அல்ல, ஆனால் தாழ்மைப்படுத்துவதன் மூலம்; வல்லமையினால் அல்ல, ஆனால் தியாகத்தின்மூலம். நீர் ஆட்டுக்குட்டியை போல பலியிடப்பட்ட சிங்கம் என்பதை காண எனக்கு உதவும், அதன்மூலம் என்னுடைய தாழ்மையில் உம்முடைய மகிமையை உணருவேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.