நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 8: ஆசாரியன்"
உலகத்தின் பிரச்சனைகள் எல்லாம் சரியாகவேண்டும் என்று விரும்புகிறாயா? இந்த வேத பகுதியில், வசனம் 28, ஆசாரியனின் பணி 1) "பலிபீடத்தின் மேல்" சென்று - மக்களின் சார்பாக அவர்களுக்கு மன்றாடி தேவனுக்கு முன்பாக செல்லவேண்டும், 2) "தூபவர்கம் ஏற்றவேண்டும்" - தேவனை குணப்படுத்தும் மத சடங்கு (லேவியராகமம் 16:13) 3) "அங்கியை தரித்திருக்க வேண்டும்" - ஆசாரியர்கள் தேவனிடம் ஞானத்தை பெற்று மக்களுக்கு ஆலோசனை செல்பவர்களாக அடையாளப்படுத்தியது. வசனம் 29-இல், ஏலியின் குமாரர்கள், அந்த நாட்களின் ஆசிரியர்களை பார்க்கிறோம் - மக்களை காக்கவேண்டிய அவர்கள் - மற்றவர்களின் உழைப்பில் தங்களை செழிப்பாக்கி கொண்டிருந்தார்கள். இது அநீதி மாத்திரம் அல்ல, மற்றவர்களை காக்கவேண்டிய இவர்களே அவர்களை தீங்கப் படுத்தினார்கள். இந்த தவறுகளை எவ்வாறு தேவன் சரிசெய்வார்?
நம்முடைய மற்றும் நம்மை சுற்றிலும் இருக்கிறவர்கள் ஜீவியங்களை நாம் பார்க்கும்போது, இதே கேள்வியை தான் கேட்கிறோம். இந்த உலகின் தவறுகளை தேவன் எவ்வாறு சரிசெய்வார்? நாமும் மற்றவர்களுக்கு தீங்கு செய்திருக்கிறோம் என்று யோசிக்கும்போது அது ஒரு கடினமான கேள்வியாக இருக்கிறது. நாம் நேசித்து பராமரிக்க வேண்டியவர்களையே நம்முடைய சொந்த ஆசைகளினாலும் முன்னுரிமைகளினாலும் கஷ்டப்படுத்துகிறோம்.
தேவன் இந்த தீங்கை கண்டு அதை நிறுத்துகிறவராக இருக்கிறார் என்று பார்க்கிறோம் (வசனம் 30-31) தீங்கு செய்கிறவர்களுக்கு சரியான தண்டனையை வழங்குவார் (வசனம் 34). இந்த தவறுகள் நிறுத்தப்படவேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஆனால் நமக்காக தேவன் முன்பு சென்று ஒருவர் வழக்காட தேவையுள்ளவர்களாக இருக்கிறோம், ஏனென்றால் நாமும் தவறு இளைத்தவர்கள் தான். யார் இதை செய்யமுடியும்? வசனம் 35 சொல்கிறது, "எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசிரியனை எழுப்புவேன்... நித்தியமாக என்னுடைய அபிஷேகம்ப்பெற்றவர்". எபிரேய மொழியில், "உண்மையுள்ள" என்றால் "நிலைத்திருப்பது" என்று அர்த்தம், ஆகவே இந்த ஆசாரியத்துவம் என்றென்றைக்கும் நிலைக்கும். நித்தியமாக என்னுடைய அபிஷேகம்ப்பெற்றவர் என்று சொல்லும்போது "என் ராஜா"-வை குறிக்கிறது. யார் உண்மையுள்ள மற்றும் நிலைத்திருக்கும் ஆசாரியராகவும் ராஜாவாகவும் இருப்பது? சரித்திரத்தில் ஒருவர் மாத்திரமே - இயேசு.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, நிலைத்திருக்கும் ஆசார்யாரும் ராஜாவுமாகியவரே, நாங்கள் எங்கள் சிந்தனையிலும் வார்த்தையிலும் கிரியையில் குற்றமுள்ளவர்களானாலும், உம்மிடத்தில் வர எங்களுக்கு ஒரு வழியை உருவாக்கியிருக்கிறீர். எங்கள் நம்பிக்கையை வழிநடத்த காக்க உம்முடைய கிருபையை தாரும்.கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.