பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 16 நாள்

நாள் 16

உண்மைகள் முதல் நம்பிக்கை வரை

பரிசுத்த வேதாகமத்தில் என்னால் புரிந்துகொள்ள முடியாத பகுதிகள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் புரிந்துகொண்ட பகுதிகளே என்னை தொந்தரவு செய்கின்றன. —மார்க் ட்வைன்

வெளிப்பாடுகள் கொடுக்கப்படும்போது பொறுப்பும் கொடுக்கப்படுகிறது. தேவனை அறிகிற அறிவு அருளப்படும்போது வாய்ப்பும் அருளப்படுகிறது. தேவனை நமது அப்பாவாக, பரிபூரண பிதாவாக நாம் கண்டுகொள்ளும்போது நிச்சயமாகவே அப்படி நடக்கும். பிதாவாகிய தேவனைப் பற்றிய அனைத்து அடிப்படை உண்மைகளையும் நாம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த உண்மைகள் விசுவாசமாக மாறும் வகையில் பரிசுத்த ஆவியானவர் நம் மூலம் வாழ அனுமதிக்க நாம் தயாரா?

எருசலேம் நகரம் தான் சத்தியத்தை அறிந்தாலும் அதை விசுவாசிக்கவில்லை. தீர்க்கதரிசிகள் மீண்டும் மீண்டும் வந்தாலும், எருசலேம் ஜனங்கள் இன்னும் தேவனை சாராமல் சுயமாக வாழ்வதையேத் தேர்ந்தெடுத்தனர்.

இடுக்கண் செய்து,
ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
அது (தேவ)சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை,
அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
அது கர்த்தரை நம்பவில்லை,
அது தன் தேவனிடத்தில் சேரவில்லை. (செப்பனியா 3: 1-2)

ஐயோ. எத்தனை வீண் அது! தேவனைப் பற்றிய அறிவை அறிவது மிகப்பெரிய திருவிழாவிற்கான அழைப்பைப் போன்றது. அந்த அழைப்பிதழைத் திறந்தால் அதில் கூறப்பட்டுள்ளது:

நீ நீ தான்! என்னுடன் விருந்துக்கு வா! என்னில் இளைப்பாறு வா! நீ நீயாகவே வா! விரைவாக வா, இப்படிக்கு,கர்த்தர்.

கர்த்தரின் பண்புகளில் ஒன்றின் மீது மட்டும் உங்கள் இதயத்தை ஒருமுகப்படுத்தும்படி அவரிடமே கேளுங்கள்—எந்த ஒன்றின் மேல் உங்கள் விசுவாசத்தை வளர்க்க அவர் விரும்புகிறாரோ அந்த ஒன்றை:

  • அவர் உங்கள் அருகில் இருக்கிறார்
  • அவர் தேற்றுகிறார்
  • அவர் வேறு பிரிக்கிறார்
  • அவர் தேவைகளை சந்திக்கிறார்
  • அவர் நம்மில் களிகூர்கிறார்
  • அவர் நம்மேல் பிரியமாயிருக்கிறார்
  • அவர் நம்மேல் மனதுருகுகிறார்
  • அவர் தயவு பாராட்டுகிறார்
  • அவர் பொறுமையாயிருக்கிறார்
  • அவர் துதிக்கு பாத்திரர்
  • அவர் உண்மையுள்ளவர்
  • அவர் மன்னிக்கிறார்
  • அவர் நீதி உள்ளவராய் இருக்கிறார்
  • அவர் அன்பாயிருக்கிறார்

அப்பா பிதாவே, நீர் யார் என்பதில் இதிலிருந்து ஒரு சத்தியத்தை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொடுங்கள்,அதற்கு சாட்சியாக என் வாழ்வை மாற்றும். நான் இப்போது உன்னில் இளைப்பாறுகிறேன். நான் எனது சொந்த முயற்சியை நிறுத்தி விடுகிறேன். இந்த சத்தியத்தின் காரணமாக, இயேசுவில், நீங்கள் என்னை உம்மண்டை திருப்பிவிடுவீராக, உம்மில் நம்பிக்கை வைத்து, உங்களுடன் ஆழமான நெருக்கத்திற்கு என்னை இழுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமேன்.

பீட்-இன் தின தியானத்தை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள்!

யோசிக்க:

1) ஒரு தகப்பனாக தேவனின் குணங்களில் எது உங்கள் இதயத்தில் மிகவும் மென்மையாக பேசியது? ஏன்?

2) ஏன் சிலுவை என்பது தேவனின் தகப்பன் தன்மையை சிறப்பாக வல்லமையாக வெளிப்படுத்துகிறது? எப்படி?

3) இந்த தியானம் எந்த வழிகளில் உங்கள் பிதாவாகிய தேவனுடனான உங்கள் உறவின் நெருக்கத்தை ஆழப்படுத்தியுள்ளது?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/