பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 13 நாள்

நாள் 13

குற்றமனப்பான்மையற்ற—மன்னிப்பு

ஐயோ! ஒருவரின் தோற்றத்தால் ஒருவரின் குற்றத்தை காட்டிக்கொடுக்காமல் இருப்பது எவ்வளவு கடினம். —ஓவிட்

குற்ற உணர்வு பெரியது... கனமானது. ஒரு கனமான நங்கூரம் நமது காலில் கட்டப்பட்டது போல—பெரியதும் சிறியதுமான—நம்முடைய கடந்த கால பாவங்கள் அவமானம் என்னும் ஆழ்கடலில் அமிழ்த்தலாம். அந்த அவமானம் நமது பாவங்களை மனிதனாலும்(இது உண்மையாக இருக்கலாம்) ஏன் சில நேரங்களில் கடவுளாலும்(இது உண்மை அல்ல!) கூட மன்னிக்க முடியாது என்று நிச்சயமாக நம்ப வைக்கிறது. இதனால் நாம் கடவுள் நம்மை மன்னிக்க விரும்பவில்லை என்றும், மேலும் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார் என்றும் நினைக்க வைக்கிறது.

ஆனால், இதற்கு முன் நாம் பல முறை பார்த்தது போலவே, தேவன் இப்படிப்பட்ட நமது யூகங்களுக்டு முற்றிலும் எதிர் என்பதை வேதத்திலிருந்து நாம் அறியலாம்.

“… அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்....” (யாத்திராகமம் 34:7)

அவர் மன்னிக்கிறார். பிதாவாகிய தேவன் தன்னை உண்மையாக நம்புபவரை மன்னிக்கிறார். அவர் எல்லாவற்றையும் மன்னிக்கிறார், எல்லாவற்றையும் முழுமையாக மன்னிக்கிறார்.

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ,
அவருக்கு பயப்படுகிறவர்கள் மேல் அவர் கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது;
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ,
அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். (சங்கீதம் 103:11-12)

ஒரு நிமிடம் இதை சற்று உணர்ந்து பாருங்கள்.

பரிசுத்த வேதாகமம் தேவனின் மன்னிக்கும் தன்மையை விவரித்து காண்பிக்கிறது. இது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து என்னும் மனுஷ குமாரனின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் எனும் முறையில் உறுதிபடுத்தப்பட்டது. இது எல்லாம் அவர் மன்னிக்கும் தகப்பன் என்பதால் மாத்திரமே சாத்தியமாயிற்று.

அவர் [இயேசு] நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். (ரோமர் 4:25)

தகப்பனே, நான் உமது அன்பிற்கு தகுதியானவன் அல்ல, என் பாவத்தின் காரணமாக உமது மன்னிப்புக்கு நான் தகுதியற்றவன். கருணை காட்டுவதற்கும், தயவு காட்டுவதற்கும், என் மீது நீர் பொறுமையாக இருப்பதற்கும் மிக்க நன்றி. நீங்கள் என் பாவத்தைக் மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், அதிலிருந்து மீள எனக்கு உதவுங்கள்! உமது மன்னிப்பிற்காக நன்றி. நான் அதை நம்புகிறேன். ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/