பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 8 நாள்

நாள் 8

இதயப்பூர்வமான இரக்கம்

நான் தயவைத் தேர்ந்தெடுக்கிறேன்... ஏழைகளிடம் தனியாக இருப்பதால் அவர்களிடம் கருணை காட்டுவேன்,பணக்காரர்கள் பயப்படுகிறார்கள் எனவே அவர்கள் மீது கருணை காட்டுவேன், இரக்கமற்றவர்களிடம் இரக்கம் காட்டுவேன், ஏனெனில் தேவன் இரக்கமில்லாத என் மீது அப்படிதான் இரக்கம் காட்டினர். —மேக்ஸ் லுக்காடோ

தேவனின் இரக்கத்தைப் பற்றி பேசும் பகுதிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

“…உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்;நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை....” (2 நாளாகமம் 30:9)

“கர்த்தர், கர்த்தர்; இரக்கமும்...உள்ள தேனன்…” (யாத்திராகமம் 34:6)

இந்த வசனங்கள்நபிதாவாகிய தேவன் நம்மீது எவ்வளவு இரக்கத்துடன் நிறைந்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. அவர் உண்மையிலேயே நம்மீது அக்கறை காட்டுகிறார், மேலும் அவர் உங்கள் மீதும் என் மீதும் பரிவு கொள்கிறார்.

இது மிக முக்கியமான காரியம், சிந்தித்து பார்த்தால்… இரக்கம் என்றால் “பரிவோடு”—ஆனால் இந்த மூன்று வார்த்தை உணர்த்துவதை பாருங்கள்: கர்த்தர். உங்கள்மீது. பரிவோடிருக்கிறார். உங்கள் பரம பிதா உங்கள் மீது எந்திரத்தனமான நேசத்தோடு இல்லை; அவரது நேசம் உணர்வுப்பூர்வமானது .

நான் கல்லூரி காலத்தில் ஒரு மிஷன் குழுவுடன் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தேன். ஒரு கிராமத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனைக் கண்டோம். அவன் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டான்—ஒரு தீண்டத்தகாதவனாக. ஆனால் நகரத்தில் உள்ள ஒரு சிறிய சுவிசேஷ தேவாலயத்தின் கருணையுள்ள போதகர் தனது கைகளை நீட்டினார்,அவனைத் தொட்டார். சிறுவனின் சிதைந்த முகம், கைகள் மற்றும் கால்களைத் கழுவுவதற்கு அவர் மட்டுமே தயாராக இருந்தார்.

ஆனால் ஒரு நாள் காலை நான் விழித்து வரும்போது எனது குழு நபர் ஒருவரின் மடியில் அவன் அமர்ந்திருந்தது தன் மறக்கவே மாட்டேன், எனது அந்தக் குழு நண்பனின் பெயர் ரேன்டி. ரேண்டி அவனுக்கு “பேட் எ-கேக்” என்னும் விளையாட்டு எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொடுத்திருந்தான். ரேண்டியின் உள்ளங் கைகள் அந்த சிறுவனின் சிதைந்த கட்டைக் கையை தொட்டது, அந்த சிறுவனின் முகம் புன்னகையால் மலர்ந்தது, எனக்கு அப்போது தேவனின் இரக்கம் என் கண் முன் வந்து சென்றது— ஆனால் ஒரு பெரிய வித்தியாசத்தோடு... பரம பிதாவின் மடியில் உட்கார்ந்து இருக்கும் பிள்ளையாக நான்.

அப்பா பிதாவே, எனக்காக துன்பப்பட உமது மகனை அனுப்பியைது இரக்கத்தின் சிறந்த வடிவம்! உங்கள் மடியில் இருக்கும் தொழுநோயாளி குழந்தையாக நான் என்னைப் பார்க்கிறேன். உம்மால் மட்டுமே என்னை இவ்வளவாய் நேசிக்க முடியும், என்னை அப்படி முழுமையாய் நேசிப்பதற்காக நன்றி. உங்கள் கண்களால் உலகைப் பார்க்கவும், அதனால் நான் உங்கள் இரக்கத்தை உலகுக்குக் காட்டவும் உதவி செய்யும்! ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/