பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 14 நாள்

நாள் 14

நீதியின் அவசியம்

எல்லாரும் நியாயத்தீர்ப்பு கிடைக்க வேண்டுமென்று நினைக்கின்றனர், ஆனால் மற்றவர்களுக்கு. —புரூஸ் காக்பர்ன்

சில குடும்பங்களில், தந்தை தனது குழந்தைகளை தவறான அல்லது நியாயமற்ற வழிகளில் தண்டிக்கிறார். வீட்டில் நடக்கும் ஒரு சிறிய மாற்றத்திற்காக அவர் தனது குழந்தையிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளலாம் அல்லது அற்ப காரியத்திற்காக அவர்களிடமிருந்து ஏதாவது நல்லதைத் தடுக்கலாம்.

பூமிக்குரிய தந்தைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலாம். ஆனால் இந்தக் குறைகளை தேவனைப் பற்றிய நமது கருத்துக்கு பயன்படுத்தினால், அவருடைய அதிகாரம், நோக்கங்கள், இறுதியில் அவரது நீதியை கேள்விக்குள்ளாக்குவோம்.

தேவன் அநியாயமானவர் என்று யோபு நினைத்தார்.அவர் தனக்குள்ள எல்லாவற்றையும் இழந்தார்— ஆனால் அவர் தனது உத்தமத்திலே நிலை நின்றார். அவரின் நண்பரான எலிகூ தேவ நீதியை எடுத்துரைத்து அதனை புரிந்து கொள்ள உதவி செய்தார்:

“மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி;
அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
தேவன் அநியாயஞ் செய்யாமலும்,
சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.” (யோபு 34:11-12)

அவரே நீதி.

தேவன் தனது ஜனங்களை நேசிக்கிறார், ஆனால் அவர் நியாயமானவர் என்ற உண்மையை அது மாற்றாது. அவர் பரிபூரணமானவர், எனவே அவர் செய்யும் அனைத்தும் நல்லது,சரியானது—அதாவது அவர் பாவத்தை கண்டும் காணாதவர் போல செல்ல இயலாது.

எனவே சிலுவையில் நீதி நிறைவேற்றப்பட்டதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் மன்னிக்கப்படுவதற்கு இயேசு விலை கொடுத்த அந்த பயங்கரமான நாளில் பாவம் தண்டிக்கப்பட்டது. அந்த தியாகம் தேவனை நமக்கு அன்பானவராகவும் நியாயமானவராகவும் காட்டுகிறது. நாம் கிறிஸ்துவிற்குள் இருந்தால், நம் பாவத்திற்கான தண்டனை கிறிஸ்துவின் மீது விழுகிறது.

ஆனால் இந்த பரிசை மறுப்பவர்களுக்கு, அவர்களின் தண்டனை விரைவாகவும் நியாயமாகவும் இருக்கும்.

பிதாவே, பூமிக்குரிய அநீதி உங்களைப் பற்றிய எனது கண்ணோட்டத்தைக் கெடுக்க விடாதேயும். உமது வல்லமையும் நீதியும் அன்பும் எனக்குக் கச்சிதமாக ஒன்றிணைந்த இடமான சிலுவையைக் காண எனக்கு மனக் கண்களைத் தாரும். ஆமேன்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/