பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

நாள் 1
இதில் ஒன்று மற்றொன்றைப் போல அல்ல
என் தந்தை யார் என்பது முக்கியமில்லை; அவர் எப்படிபட்டவர் என நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதே முக்கியம். —ஆனி செக்ஸ்டன்
மக்கள் இந்த வாழ்க்கையில் யாரை "அப்பா" என்று அழைக்கிறார்களோ அவரைப் போலவே தேவனையும் சித்தரிக்கின்றனர். ஆனால் இந்த உலக பிதாக்கள் நம் பரம பிதாவை பிரதபலிக்கின்றனரா? தேவன் அவர்களைப் போன்றவரா?
அது அந்த நபரைச் சார்ந்தது.
நம்மில் சிலருக்கு, "அப்பா" என்னும் சொல் ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. மற்றவர்களுக்கு, நம் தந்தையின் காலடிச் சத்தத்தை கற்பனை செய்வது, ஓடிச் சென்று மறைந்து கொள்ளத் தோன்றும் ஒரு உணர்வை தருகிறது. நீங்கள் உங்கள் தந்தையை திரும்பிப் பார்த்து, "ஒருவேளை தேவன் என் தந்தையப் போன்ற நபர் என்றால், எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் வேண்டாம்" என்று கூறலாம்.
எனவே நாம் So when we talk about “பிதாவாகிய தேவனைப்” பற்றி பேசும் போது, நமது மனமே—நமது உணர்வுகள் அல்ல—ஆதிக்கம் செய்ய வேண்டும். நம்முடைய பூமிக்குரிய தகப்பனுக்கும் பரலோகத் தகப்பனுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை நாம் காண வேண்டும். "பிதாவாகிய தேவன்" என்பதன் பொருளை—ஆவியானவர் வேதத்தை பயன்படுத்தி நமக்கு வழிகாட்டுவார் உணர்வுகளையோ உலக அனுபவங்களையும் பயன்படுத்தி அல்ல.
யாத்திராகமத்தில் காணப்படும் மோசேயின் வேண்டுதலை கவனியுங்கள்—தேவனின் தகப்பன் குணங்களை நாம் வேதவாக்கியங்களில் தேடும்போது அதைப் பின்பற்றுங்கள்:
உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; (யாத்திராகமம் 33:13)
மோசேயின் வேண்டுகோளுக்குப் பின் வரும் வசனங்களில், தேவன் தன்னைப் பற்றி ஏறத்தாழ பதினான்கு தந்தையின் பண்புகளை வெளிப்படுத்தி பதிலளித்தார்—அவை ஒவ்வொன்றும் வேதம் முழுவதும் பல இடங்களில் விவரிக்கப்பட்டிருகின்றன.
இந்த குணாதிசயங்கள் பூமியில் உள்ள தந்தைகளுக்கு ஒரு அற்புதமான முன்மாதிரியாக செயல்படுகின்றன, ஆனால் அவை நமது குற்ற மனப்பான்மையை தூண்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக, தேவப்பிள்ளைகளாகிய நாம் நம்மை மதிக்கும் நேசிக்கும், போற்றும், அருமையான பெற்றோரைப் பற்றிய அற்புதமான காரியங்களைக் கூறி ஊக்குவிக்க எழுதப்பட்டிருக்கிறது.
பிதாவே, உம்மைப் பற்றி நான் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் உமது வார்த்தையின் உண்மையால் துடைக்கப்பட வேண்டும் என நான் ஜெபிக்கிறேன். நான் உம்மை அறிய விரும்புகிறேன், உணர்வுகளால் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்படாமல் சரியான முறையில் உம்ப் பற்றி அறிய விரும்புகிறேன். தயவுசெய்து என் மனதை தெளிவுபடுத்தி எனக்கு உதவி செய்யும் தகப்பனே. உமது நல்ல ஆவியானவர் என்னை சத்தியத்திற்குள் வழிநடத்தட்டும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்
