பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

நாள் 9
கிருபை என்னும் நல்ல பரிசு
என்னை நியாயந்தீர்க்காதீர்கள். நான் நிறைய பணம் சம்பாதித்தேன். —சமந்தா பீ
இந்த உலகில் நாம் எப்போதும் நமது செயல்திறன், தோற்றம் மற்றும் உடைமைகளால் தீர்மானிக்கப்படுகிறோம். இது ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்றாலும், உங்கள் பூமிக்குரிய மதிப்பு இந்த காரியங்களை அடிப்படையாகக் கொண்டது. இவைகள் இல்லாமல், நீங்கள் ஒன்றுமில்லை.
ஆனால் தேவன் நம்மை அப்படியே நியாயம் தீர்ப்பதில்லை. ஏனெனில் அவர் அன்பாகவே இருக்கிறார், அவரைப் பொறுத்தவரை நம்மை அங்கீகரிப்பது நம்மை சார்ந்ததல்ல, அது வேறுபட்ட ஒன்றை அடிப்படையாகக் கொண்டது:
கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்;.” (யாத்திராகமம் 34:5-7)
அவர் கிருபை பொருந்தியவர் He is gracious.
நாம் "அப்பா பிதாவே" என்றழைக்கும் தேவன் இவர்தான். அவருடைய கிருபை எல்லாவற்றின் விதிகளையும் மாற்றுகிறது. நாம் அதற்குத் தகுதியான எதையும் செய்யாவிட்டாலும், அவர் தனது சிறந்ததை நமக்குப் கொடுக்கிறார்.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்—இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு—ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர் 2:8-9)
இதற்கு நீங்கள் என்ன சொல்ல முடியும்? இத்தகைய அன்பிற்கு நாம் என்ன பதில் செய்வது?
கர்த்தாவே, இவ்வுலகத்தை விட வித்தியாசமான தரத்தில் எங்களை வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் அடைய முடியாத எதிர்பார்ப்புகளில் இருந்து எனக்கு நீர் அளித்த விடுதலை நிம்மதி அளிக்கிறது. என்னால் சம்பாதிக்க முடியாத உமது பரிசான இரட்சிப்பில் கவனம் செலுத்த எனக்கு உதவி செய்யும்! ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
More
